IND vs SL Squad Announcement Latest Updates: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை (ICC T20 World Cup 2024) இந்திய அணி கைப்பற்றியதை தொடர்ந்து, அதில் விளையாடிய வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டிருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், தூபே ஆகியோர் மட்டும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றனர். அதிலும் தூபே மட்டும்தான் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருந்தார்.
தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று நாடு திரும்ப உள்ளது. இதையடுத்து, இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. வரும் ஜூலை 27ஆம் தேதி முதல் ஆக. 7ஆம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
கம்பீருக்கு முதல் தொடர்...
மேலும் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பின், டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் மட்டுமே இந்திய அணி ஒருநாள் தொடரை விளையாடியது. அதில் கே.எல் ராகுல் கேப்டன் பொறுப்பை பெற்றிருந்தார். ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்டோர் அதில் பங்கேற்கவில்லை. அந்த தொடரையும் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருந்தது.
மேலும் படிக்க | ICC Champions Trophy 2025: இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் என்ன நடக்கும்?
அதன்பின், தற்போது இலங்கைக்கு எதிராகவே இந்திய அணி ஒருநாள் தொடரை விளையாட உள்ளது. மேலும் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதால், பயிற்சியாளராக அவரின் முதல் தொடராகவும் இலங்கை சுற்றுப்பயணம் அமைகிறது. சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதுதான் இந்திய அணியின் அடுத்த இலக்காக இருக்கும் என்பதால் சரியான ஓடிஐ அணியை இப்போது அமைப்பதே அதற்கு சரியானதாக இருக்கும்.
இந்திய அணி அறிவிப்பு எப்போது?
எனவே இதில் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என உறுதியாகக் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா தலைமையில்தான் இந்திய அணி தொடர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் எந்தெந்த வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்ப்பும் இருக்கிறது. மறுபுறம் டி20 அணியில் இருந்து ரோஹித், விராட், ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளதால் தற்போது ஜிம்பாப்வே உடன் விளையாடிய அணியில் இடம்பெற்றிருந்த பெரும்பாலான வீரர்கள்தான் அதிலும் விளையாடுவார்கள் எனலாம்.
இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ எப்போது அறிவிக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் வரும் ஜூலை 21ஆம் தேதி (ஞாயிறு) அன்று டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், தேர்வுக்குழு உடன் இணைந்து வீரர்களை தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் முறையே ஜூலை 27, ஜூலை 28 மற்றும் ஜூலை 30 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஆக். 2, ஆக. 4, ஆக. 7 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது. இதில் டி20 போட்டிகள் அனைத்தும் பல்லேகல்லேவிலும், ஒருநாள் போட்டிகள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் ஓய்வா? அடுத்த உலக்ககோப்பை வரை டைம் இருக்கு பாஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ