ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பன்ட், பும்ரா நீக்கம் ஏன்? பிசிசிஐ விளக்கம்

வேகபந்து வீச்சாளர் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2019, 03:49 PM IST
ஒருநாள் தொடரில் இருந்து ரிஷப் பன்ட், பும்ரா நீக்கம் ஏன்? பிசிசிஐ விளக்கம் title=

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி தொடங்கிய, இந்த ஆண்டு சனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில்  டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இதனையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டி சனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கி சனவரி 18 ஆம் தேதி வரை நடைபெறும் ஒரு நாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. 

இதன்பின்னர், நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்று மூன்று டி-20 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. ஒருநாள் போட்டி சனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களில் பும்ரா மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்ற ரிஷப் பன்ட்க்கு சில காயங்கள் ஏற்ப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஆஸ்திரேலியா வுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்தும், நியூசிலாந்து சுற்றுபயணத்தில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முகமது சிராஜும் மற்றும் சித்தார்த் கவுலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

 

ஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் வேகபந்து வீச்சாளர் பும்ரா, விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் ஆவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News