இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்ப்பதற்காக இன்று இங்கிலாந்து செல்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இதில் தரவரிசையின் அடிப்படையில் முதல்
8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதவேண்டும். ‘லீக்‘ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணியின் போட்டி விவரம்:-
முதல் போட்டி : 4-ம் தேதி - பாகிஸ்தான்
இரண்டாவது போட்டி : 8-ம் தேதி - ஸ்ரீலங்கா
மூன்றாவது போட்டி : 11-ம் தேதி - தென்னாப்பிரி
இந்திய வீரர்களின் விவரம்:-
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், ரகானே, யுவராஜ் சிங், ஹர்த்திக் பாண்டியா, டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா, தினேஷ் கார்த்திக்.