புதுப்பிக்கப்படவுள்ள சேப்பாக்கம் மைதானம்..!சர்வதேச போட்டிகள் அதிகரிக்குமா..?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 16, 2022, 02:31 PM IST
  • சேப்பாக்கம் மைதானத்தை புதுப்பிக்க அனுமதி
  • ரூ.139 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது
  • சர்வதேச போட்டிகள் அதிகரிக்குமா..?
புதுப்பிக்கப்படவுள்ள சேப்பாக்கம் மைதானம்..!சர்வதேச போட்டிகள் அதிகரிக்குமா..? title=

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானம் இந்திய வீரர்களுக்கு மட்டும் அல்ல வெளி நாட்டு வீரர்களுக்கும் பிடித்தமான இடம். ஏன் என்றால் இங்கு இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் சொந்த நாட்டு வீரரை மட்டும் அல்லாது வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அதை ஊக்குவிப்பார்கள். இதனாலேயே வெளி நாட்டு வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட ஆர்வம் காட்டுவார்கள்.

அது மட்டும் இன்றி சிலருக்கு செண்டிமென்டாகவும் இந்த மைதானம் வெற்றியை வாரி குவிக்கும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரை உலக அளவில் பிரபலம் செய்த சாதனையையும் இந்த மைதானம் செய்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. அதேபோல, கடந்த 1952ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்த்து இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வெற்றி பெற்றது. 

மேலும் படிக்க |எம்எஸ் தோனி ஓய்வு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

பேட்டிங்கிற்கு சாதகமான சூழல் உள்ள இந்த மைதானத்தில் பவுளர்கள் பலரும் சாதனை படைத்திருக்கிறார்கள். அதேபோல, இந்த மைதானத்தில் கடந்த 1877ஆம் ஆண்டு முதல் ரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், கிரிக்கெட் துறையில் இரு அணிகளும் சமமாக ‘tie’ ஆன வரலாறு இரண்டு முறை நடந்திருக்கிறது. அதில் ஒன்று செப்டம்பர் 1986ல் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்கும், சாதனைகளுக்கும் பெயர்போன சேப்பாக்கம் மைதானம் கடந்த 2011ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது புதுப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 11 வருடங்களாக அதே நிலையில் இருக்கும் இந்த மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யவும் வேண்டி சேப்பாக்கம் மைதான நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

Chennai Chepauk

மேலும் படிக்க | Ind vs SL: குறும்புக்கார ரோஹித்! அம்பயரை டிஆர்எஸ் மூலம் கலாய்க்கும் வீடியோ வைரல்

இந்தநிலையில், தற்போது இந்த மைதானத்தை புதுப்பித்து விரிவாக்கம் செய்ய 18 நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமாக மரங்களை வெட்டக்கூடாது, நீர் ஆதாரங்களை சேதப்படுத்தக்கூடாது உள்ளிட்டவை முக்கியமாக இடம் பெற்றுள்ளன. 139 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படவுள்ள இந்த மைதானம் 62 ஆயிரம் சதுர அடியில் இருந்து 77 ஆயிரம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. 

இதன் மூலம் மேலும் 36 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியை இந்த மைதானம் பெறவுள்ளது. இதனால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த மைதானத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News