இந்திய அணியின் மிடில் ஆர்டர் சுவராக இருந்த புஜாரா, மோசமான பார்ம் காரணமாக இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என திட்டவட்டமாக அறிவித்த பிசிசிஐ தேர்வுக்குழு, புஜாராவுக்கு மாற்றாக இளம் வீரர்களை நோக்கி தேர்வுக்குழு நகர்ந்துவிட்டதாகவும் தெரிவித்தது. ஆனால், புஜாராவுக்கு பதிலாக இந்திய அணிக்குள் வந்த பிளேயர்கள் இதுவரை சிறப்பாக ஆடி தங்களது திறமையை நிரூபிக்கவில்லை. புஜாரா இடத்தை எந்தவொரு பிளேயரும் உறுதி செய்யவில்லை. இந்த சூழலில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ அறிவிக்க இருக்கும் நிலையில், தற்போது சூப்பர் பார்மில் இருக்கும் புஜாரா அழைக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரஞ்சி டிராபில் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா விளையாடிக் கொண்டிருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சவுராஷ்டிரா அணிக்காக களமிறங்கிய புஜாரா, 110 ரன்கள் குவித்தார். முதல்தர கிரிக்கெட் போட்டியில் அவர் அடித்த 62வது சதமாகும். ஒருகட்டத்தில் 74 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் இருந்த சவுராஷ்டிரா அணியை, தன்னுடைய திறமையான பேட்டிங் மூலம் சரிவில் இருந்து மீட்டெடுத்தார் புஜாரா. இவருக்கு பக்கபலமாக ஷெல்டன் ஜாக்சன் விளையாட முதல் நாள் ஆட்ட நேர முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 242 ரன்கள் எடுத்துள்ளது.
இப்படி தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருக்கும் புஜாராவை மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியுள்ளது. 2021-23 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் புஜாரா சிறப்பாக விளையாடியிருந்தால் இந்திய அணியில் அவருடைய இடத்தை இழந்திருக்க மாட்டார். அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியதற்கு புஜாராவின் பேட்டிங்கும் ஒரு காரணம். முதல் இன்னிங்ஸில் 14 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார் அவர்.
அந்த டெஸ்ட் போட்டி புஜாராவின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முடிவுரை எழுதியதாகவும் பார்க்கப்பட்டது. ஆனால், நம்பிக்கை இழக்காத அவர் தொடர்ச்சியாக கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். நல்ல பார்மில் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளலாம் என கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்தியாவில் புஜாரா சிறப்பாக விளையாட கூடியவர் என்பதால், இப்போது சிக்கலில் இருக்கும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கு வலுசேர்ப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே விராட் கோலியின் வருகை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயம் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் இந்த இடத்துக்கு புஜாராவை பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை கிரிக்கெட் வட்டாரம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
மேலும் படிக்க | ஜடேஜா தந்தை கண்ணீர் மல்க பேட்டி..! மருமகள் மீது சரமாரி குற்றச்சாட்டு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ