Delhi Capitals என்ற புதுப்பெயருடன் வருகிறது Delhi Daredevils!

வரும் 2019-ஆம் ஆண்டு IPL போட்டியினை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியின் பெயர் டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Dec 4, 2018, 06:18 PM IST
Delhi Capitals என்ற புதுப்பெயருடன் வருகிறது Delhi Daredevils! title=

வரும் 2019-ஆம் ஆண்டு IPL போட்டியினை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியின் பெயர் டெல்லி கேபிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

இந்த தகவலினை அணியின் தலைமை பொறுப்பில் உள்ள GMR குழுமம் மற்றும் JSW இன்று நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளது. அணியின் பெயர் மற்றும் புதிய லோகோ, ஜெர்ஸியினை அனி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

முன்னாதக டெல்லி ட்ரேடெவில்ஸ் என்ற பெயருக்குப் பதிலாக டெல்லி கேபிடல் அல்லது டெல்லி கேபிடல்ஸ் என்ற இரண்டில் ஏதாவது ஒன்றை வைக்க ஆலோசிக்கப்பட்டது. முடிவில் டெல்லி கேபிடல்ஸ் எனும் புதிய பெயர் வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி கேபிடல்ஸ் என்ற பெயர் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒன்றே ஆகும். இந்தியாவில் நடக்கும் UBA ப்ரோ கூடைப்பந்தாட்ட லீக் போட்டிகளில் இதே பெயரில் ஒரு அணி விளையாடி வருகின்றது. அதேப்போல் அமெரிக்காவில் நடத்தப்படும் நேஷனல் ஹாக்கி லீக் போட்டிகளில் வாஷிங்டன் கேபிடல்ஸ் என்ற அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது கேபிடல்ஸ் என்ற பெயர் ஒட்டுடன் டெல்லி அணி IPL கிரிக்கெட் அணியினை மேம்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News