காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை வீரர்

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை அணி வீரர் முழுவதுமாக வெளியேறியுள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : May 9, 2022, 07:59 PM IST
  • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்த பின்னடைவு
  • காயத்தால் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்
காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய மும்பை வீரர் title=

மும்பை அணிக்கு இந்த ஆண்டு அடிமேல் அடியாக விழுந்து கொண்டே இருக்கிறது. அந்த அணியில் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக அடிக் கொண்டிருந்த ஒரே வீரர் சூர்ய குமார் யாதவ். அவரும் இப்போது காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். 5 முறை சாம்பியனான மும்பை அணி, ஐபிஎல் 2022-ஐ தோல்வியுடன் ஆரம்பித்தது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு 8 போட்டிகள் வரை இருக்கும் என்பதை யாரும் யூகிக்கவில்லை. முதல் 8 போட்டிகளில் அந்த தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.

மேலும் படிக்க | இன்னும் சென்னை அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறதா?

வெற்றிக்கு மிக அருகாமையில் வந்து, தோற்ற போட்டிகளும் உண்டு. பேட்டிங் சிறப்பாக இருந்தால் பந்துவீச்சு நன்றாக இருக்காது. பந்துவீச்சு நன்றாக இருந்தால் பேட்டிங் சிறப்பாக இருக்காது. இரண்டும் சரியாக இருக்கும் போட்டிகளில் பீல்டிங் அமையாது. இது தான் மும்பை அணியின் தோல்விக்கான காரணம். ஐபிஎல் வரலாற்றிலேயே 5 முறை சாம்பியன் என்ற சிறப்பை பெற்றிருக்கும் மும்பை அணி, 8 தோல்விகளை தொடர்ச்சியாக அடைந்த அணி என்ற மோசமான சாதனையையும் படைத்திருக்கிறது. ஆறுதல் வெற்றியாவது பெறுவார்களா? என காத்திருந்த ரசிகர்களுக்கு ராஜஸ்தான் அணி மூலம் விடிவுகாலம் பிறந்தது.

சிறப்பாக அடிக்கும் கொண்டிருக்கும் அந்த அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த மும்பை அணி, புது தெம்பை பெற்றது. அதனால், அடுத்த போட்டிகளிலும் வெற்றியை பெற்று 2 வெற்றியை பெற்றது. ஆனால் புள்ளிப் பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து 10வது இடத்திலேயே இருக்கிறது. இந்த ஆண்டு புதிதாக களமிறங்கிய இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் டாப்பராக இருக்கும்போது, இத்தனை ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் கோலோச்சிய சென்னை மற்றும் மும்பை அணிகள் டேபிள் கடைசியில் இருக்கின்றனர்.

 இதுதான் இந்த ஐபிஎல் தொடரின் விநோதம் என்று கூட கூறலாம். அதேநேரத்தில் சென்னை அணி மீண்டும் பழைய பார்முக்கு திரும்பிவிட்டது. தோனி கேப்டனாக பதவியேற்றதில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறது. அதேபோல் மும்பை அணியும், வெற்றிப்பாதையில் பயணித்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்யுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | டெல்லி அணிக்கு ஷாக்! நட்சத்திர வீரர் மருத்துவமனையில் அனுமதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News