எம்.எஸ் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்! ரவி சாஸ்திரியின் பரிந்துரை

இந்த ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு திரும்புவதற்கு இது சரியான சந்தர்ப்பமா?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 9, 2022, 02:52 PM IST
எம்.எஸ் தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்! ரவி சாஸ்திரியின் பரிந்துரை title=

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bangalore) அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை 2022க்கான ஃபினிஷராக இந்திய அணிக்கு மீண்டும் வருவதற்கு ஆதரவு பெருகிகிறது.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

ஐபிஎல்லில் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை ஆர்சிபி அணியின் ஃபினிஷர் பாத்திரத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக்.

இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஆர்சிபியால் வாங்கப்பட்ட கார்த்திக், செவ்வாயன்று ராஜஸ்தான் ராயல்ஸை ஒரு பரபரப்பான ரன் சேஸிங்கில், வெறும் 23 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் செய்துக் கொண்டிருந்த RCB அணி 87/5 என்ற நிலையில் இருந்தபோது கார்த்திக் ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.

மேலும் படிக்க | மும்பை அணி மிரட்டியது’ சிஎஸ்கே மூத்த வீரர் பகிரங்க குற்றச்சாட்டு

அவர் தனது இன்னிங்ஸின் தொடக்கத்திலிருந்தே சூப்பராக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். 

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கார்த்திக்கின் ரன் சேஸ் சாகசத்தால் ஈர்க்கப்பட்ட சாஸ்திரி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பை 2022க்கான இந்திய அணியில் இடம் பெற, தினேஷ் தகுதியானவர் என்று கருத்து தெரிவித்துள்ளார்.  

"கிரிக்கெட் விளையாடும் அளவு தகுதியுடனும் காயங்கள் இல்லாமல் இருந்தால் இந்த ஆண்டு டி-20 உலகக் கோப்பையில் தினேஷுக்கு முக்கிய இடம் இருக்கும். மேலும் அவருக்கு ஒரு வேகப்பந்து வீச்சு இருந்தால். நிச்சயமாக அவர் சிறந்த தெரிவாக இருப்பார்" என்று சாஸ்திரி ESPN Cricinfo இல் கூறினார்.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரசிகர்கள்? மும்பை - சென்னை அணிகள் காரணமா?

"அவருக்கு அனுபவம் இருக்கிறது, எல்லா ஷாட்களையும் அவர் பெற்றுள்ளார்... இப்போது தோனி இல்லை, எனவே அவரை ஒரு சிறந்த ஃபினிஷராக பார்க்கிறோம். ஆனால் எத்தனை கீப்பர்கள் வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும், தற்போது இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பந்த் இருக்கிறார். அவர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், தினேஷ் தானாகவே உள்ளே வந்துவிடுவார், "என்று சாஸ்திரி மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை 2021 இன் போது போட்டி வர்ணனையாளராக அவதாரம் எடுத்த கார்த்திக், ஐபிஎல் 2022 இல் ஆர்சிபிக்காக பேட்டிங் மூலம் பரபரப்பானவர்.
கார்த்திக் இதுவரை தனது அணிக்காக மூன்று போட்டிகளில் 90 ரன்கள் எடுத்துள்ளார் அதில் அவர் இரண்டு முறை ஆட்டமிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

36 வயதான தினேஷ் கார்த்திக், 2019 ODI உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடியது தான் கடைசியாகும். அந்தத் தொடரில் இந்தியா அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிராக தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியது.
அதன்பிறகு, தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க | ஷாபாஸ் ஷெரீப் "விரைவில்" பாகிஸ்தான் பிரதமராவார்: பிலாவல் பூட்டோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News