முன்னாள் Australian cricketer Dean Jones மாரடைப்பால் காலமானார்!!

கிரிக்கெட் விளையாட்டில், 80 மற்றும் 90 களில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரர்களில் ஒருவராக விளங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் தனது 59 வயதில் மாரடைப்பால் காலமானார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 24, 2020, 04:45 PM IST
  • டீன் ஜோன்ஸ் IPL வர்ணனைக் குழுவின் ஒரு அங்கமாக இருந்தார்.
  • அவர் இறந்த செய்தி கிரிக்கெட் உலகத்தை வருத்தப்படுத்தியுள்ளது.
  • அவர் விளையாட்டைப் பற்றிய நிபுணர் பகுப்பாய்வு மற்றும் வர்ணனைக்காக பேராசிரியர் டீனோ என்று அழைக்கப்பட்டார்.
முன்னாள் Australian cricketer Dean Jones மாரடைப்பால் காலமானார்!! title=

கிரிக்கெட் விளையாட்டில், 80 மற்றும் 90 களில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரரர்களில் ஒருவராக விளங்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் (Dean Jones) தனது 59 வயதில் மாரடைப்பால் காலமானார். ஜோன்ஸ் IPL வர்ணனைக் குழுவின் ஒரு அங்கமாக இருந்தார். அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார்.

கிரிக்கெட்டிலிருந்து (Cricket) ஓய்வு ஓய்வு பெற்ற பிறகு, ஜோன்ஸ் ஒரு தீவிர வர்ணனையாளரானார். சில சேனல்களில், அவர் விளையாட்டைப் பற்றிய நிபுணர் பகுப்பாய்வு மற்றும் வர்ணனைக்காக பேராசிரியர் டீனோ என்று அழைக்கப்பட்டார்.

அவர் இறந்த செய்தி கிரிக்கெட் உலகத்தை வருத்தப்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்புடைய பலர் அவர் மரணத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர். போலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ: T20 World Cup 2020 தொடரை நியூசிலாந்தில் நடத்தலாம்: டீன் ஜோன்ஸ் பரிந்துரை

“திரு. டீன் மெர்வின் ஜோன்ஸ் காலமான செய்தியை நாங்கள் மிகுந்த சோகத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். அவர் திடீரென இருதய நோயால் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தேவையான ஏற்பாடுகளை செய்ய ஆஸ்திரேலிய உயர் ஆணையத்திடம் நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். தெற்காசியா முழுவதும் கிரிக்கெட் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்ட அவர், கிரிக்கெட் விளையாட்டின் சிறந்த தூதர்களில் ஒருவராக இருந்தார்.

புதிய திறமைகளைக் கண்டுபிடிப்பதிலும், இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பதிலும் அவர் ஆர்வமாக இருந்தார். அவர் ஒரு சாம்பியன் வர்ணனையாளராக இருந்தார். அவரது வார்த்தைகள் மில்லியன் கணக்கான ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஸ்டார் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது மில்லியன் கணக்கான ரசிகர்களால் அவர் மிகவும் மிஸ் செய்யப்படுவார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உள்ளன.” என்று அவர் பணிபுரிந்து கொண்டிருந்த சேனல் நிர்வாகம் அவர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

ALSO READ: IPL 2020: CSK ‘சின்ன தல’-ய பெருசா miss பண்ணுவாங்க – Dean Jones!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News