2019-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்கள் குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது!
இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்தது. 14 டெஸ்டுகள், 20 ஒருநாள் போட்டிகள், 19 டி20 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி அதிக ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தற்போது 2019-ஆம் ஆண்டில் இந்திய அணி விளையாடவுள்ள தொடர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடம் 50 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளதால் இந்திய அணி குறைவான டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடுகிது.
இதன்காரணமாக உலகக் கோப்பை போட்டிக்கு பின்னரே டெஸ்ட் தொடர்கள் ஆரம்பிக்கவுள்ளன. முதற்கட்டமாக மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
BCCI வெளியிட்டுள்ள தொடர்கள் பட்டியலின் படி இந்த வருடம் இந்திய அணி 8 டெஸ்டுகளும் 19 ஒருநாள் மற்றும் 11 t20 போட்டிகளிலும் கலந்து கொள்கிறது. இதுதவிர இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியில் குறைந்தபட்சம் 9 ஆட்டங்களில் விளையாடவுள்ளதால் இந்த வருடம் இந்திய அணி குறைந்தபட்சம் 28 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தை விடவும் இது அதிக எண்ணிக்கை ஆகும்.
இந்த வருட ICC FTP-யின்படி, மார்ச் மாதம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். ஆனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மார்ச் மாதமே ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளதால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்தத் தொடர்கள் நடைபெறாது என்றே தெரிகிறது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணி தனது கடைசி ஆட்டமாக மார்ச் 13 அன்று 20 ஓவர் போட்டியில் பங்கேற்கிறது. இதன்பிறகு IPL தொடங்கவுள்ளது.
இதன்படி இந்திய அணி விளையாடவுள்ள போட்டிகள் எண்ணிக்கை
டெஸ்டுகள் - 8
ஒருநாள் - 28 (குறைந்தபட்சம்)
t20 போட்டி - 11
2019-ல் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:
- இந்தியாவில் நடைபெறவுள்ள தொடர்கள்:
5 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
2 டி20 vs ஆஸ்திரேலியா
3 டெஸ்டுகள் vs தென் ஆப்பிரிக்கா
2 டெஸ்டுகள் vs வங்கதேசம்
3 டி20 vs வங்கதேசம்
3 ஒருநாள் vs மேற்கிந்தியா
3 டி20 vs மேற்கிந்தியா
- வெளிநாடுகளில் இந்திய அணி பங்கேற்கும் தொடர்கள்:
1 டெஸ்ட் vs ஆஸ்திரேலியா
3 ஒருநாள் vs ஆஸ்திரேலியா
5 ஒருநாள் vs நியூஸிலாந்து
3 டி20 vs நியூஸிலாந்து
2 டெஸ்டுகள் vs மேற்கிந்தியா
3 ஒருநாள் vs மேற்கிந்தியா
3 டி20 vs மேற்கிந்தியா