ஐபிஎல் 2022: லக்னோவை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆஃபில் நுழைந்தது குஜராத்

ஐபிஎல் 2022: லக்னோவை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆஃபில் நுழைந்தது குஜராத்  

Written by - க. விக்ரம் | Last Updated : May 10, 2022, 11:06 PM IST
  • குஜராத் அணி வெற்றி
  • 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
  • லக்னோவை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்
ஐபிஎல் 2022: லக்னோவை வீழ்த்தி முதல் அணியாக ப்ளே ஆஃபில் நுழைந்தது குஜராத் title=

ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டான்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக சஹாவும், கில்லும் களமிறங்க சஹா 5 ரன்களிலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு அடுத்த களமிறங்கிய மேத்யூ வேடும் 10 ரன்களில் வெளியேற ஹர்திக் பாண்டியாவும் 11 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.

LSG

அதன் பிறகு மில்லரும், கில்லும் ஜோடி சேர்ந்தனர். பொறுப்பாக விளையாடிய இந்த ஜோடி லக்னோவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டது. இதன் காரணமாக அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் உயர்ந்தது. 16ஆவது ஓவரில்தான் அந்த அணி 100 ரன்களை எட்டியது.

ஸ்கோரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அதிரடி காட்ட முயன்ற மில்லர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தெவாட்டியா களம் புகுந்தார். இதற்கிடையே கில் ஐபிஎல்லில் தனது 14ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

Gill

தொடர்ந்து விளையாடிய தெவாட்டியாவும், கில்லும் ஸ்கோரை உயர்த்த முயற்சி செய்தனர். ஆனால் லக்னோவின் பந்துவீச்சு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்களை எடுத்தது.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணிக்கு டி காக்கும், ராகுலும் தொடக்கம் தந்தனர். இலக்கு எளிதானது என்றாலும் லக்னோ அணி பேட்டிங்கும் சொதப்பலாகவே தொடங்கியது. நான்காவது ஓவரிலேயே டி காக் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு ராகுலும் ஹூடாவும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் ராகுல், ஷமி ஓவரில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் லக்னோ அணி 24 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அவருக்கு அடுத்து களமிறங்கிய கரண் ஷர்மாவும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க பவர் ப்ளே முடிவடைகையில் 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

Gujarat

அவரைத் தொடர்ந்து வந்த க்ருனால் பாண்டியா, பதோனி ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 61 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

மேலும் படிக்க | ரோகித் அவுட் சர்ச்சை: மூன்றாவது நடுவரை விளாசும் மும்பை ரசிகர்கள்

அதன் பிறகு களமிறங்கிய ஹோல்டரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, நிலைத்து நின்று ஆடிய ஹூடாவும் 27 ரன்களில் ஆட்டமிழக்க லக்னோ அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் அந்த அணி 14 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன் மூலம் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News