என்னது 'World cup' ஜெயிச்சதுக்கு தோனிதான் காரணமா?! - ‘சம்பவம்’ செய்த ஹர்பஜன்!

இந்திய அணிக்குச் சாதனையாக அமைந்த இந்த உலகக்கோப்பை சர்ச்சையாக அமையவும் தவறவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 14, 2022, 03:13 PM IST
  • இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது
  • சாதனையாக அமைந்த உலகக்கோப்பை சர்ச்சையாகவும் அமைந்தது
  • எம்.எஸ். தோனி பற்றி ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்
என்னது 'World cup' ஜெயிச்சதுக்கு தோனிதான் காரணமா?! - ‘சம்பவம்’ செய்த ஹர்பஜன்! title=

2011ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இலங்கையை வென்ற இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது.  1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணி, சுமார் கால் நூற்றாண்டுக்குப் பின்னர் 2ஆவது முறையாக கைப்பற்றிய உலகக் கோப்பை இது.

இந்திய அணிக்குச் சாதனையாக அமைந்த இந்த உலகக்கோப்பை சர்ச்சையாக அமையவும் தவறவில்லை. காரணம்- அதன் இறுதிப் போட்டி. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அப்போதைய இந்திய அணி கேப்டன் தோனி, ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்ததுடன் வெற்றிக்கான இறுதி ரன்னையும் சிக்ஸர் வாயிலாக அடித்தார். அதேபோல கெளதம் காம்பீரும் சிறப்பாக விளையாடி 97 ரன்கள் குவித்தார்.  

ஆனால் உலகக் கோப்பைத் தொடரின் வெற்றியில் பேட்டிங்கில் தோனிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் காம்பிர் மற்றும் தொடரில் அதிக ரன் அடித்த சச்சின் (482) ஆகியோருக்கு வழங்கப்படவில்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில் முன்னாள் இந்திய வீரரும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் இவ்விவகாரத்தில் தற்போது காரசாரமான கருத்தைத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?

இது பற்றிக் கூறிய அவர், ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்றபோது, அது  ‘ஆஸ்திரேலிய அணியின் வெற்றி’ என அழைக்கப்பட்டதாகவும் ஆனால் இந்தியா வென்றபோது மட்டும் ‘அதை தோனி உலகக் கோப்பையை வென்றார்’ என சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். தோனிதான் உலகக் கோப்பையை வென்றார் என்றால் அணியில் இருந்த மற்ற 10 பேர் செய்தது என்ன எனவும் அவர் கேள்வி கேட்டுள்ளார். 

இது ஓர் அணி விளையாட்டு எனக் கூறியுள்ள அவர்,  ஓர் அணியில் 7-8 வீரர்கள் சிறப்பாக விளையாடினால்தான் ஓர் அணி வெற்றிப் பாதைக்குச் செல்லமுடியும் எனவும் தெரிவித்துள்ளார். 2011 உலகக் கோப்பைத் தொடரின்  இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News