ஐசிசி நடத்தும் 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் லண்டனில் தொடங்கியது. இந்த தொடரை இங்கிலாந்து நடத்துகிறது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள் என 2 பிரிவாக(‘ஏ’ , ‘பி’ ) பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
முதல் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து மற்றும் வங்காள தேசம் மோதுகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து வீரர்கள்:
ஹேல்ஸ், ஜேசன் ராய், மோர்கன், பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயீன் அலி, பிளங்கெட், வுட், ஜேக், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், வுட், ஜேக் பால் ஜோ ரூட்
வங்காள தேச வீரர்கள்:
தமீம் இக்பால், சவுமியா சர்கர், இம்ருல் கெய்ஸ், ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம், சபீர் ரஹ்மான், மெஹ்முதுல்லா, மொசாடெக் ஹொசைன், மோர்தசா, முஸ்டாபிஜூர் ரஹ்மான், ருபெல் ஹொசைன்.