சாம்பியன்ஸ் டிராபி 2017: அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

Last Updated : Jun 7, 2017, 08:48 AM IST
சாம்பியன்ஸ் டிராபி 2017: அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து title=

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 6-வது லீக்கில் போட்டியில் ஏ பிரிவு இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் நேற்று மோதின. 

சாம்பியன்ஸ் டிராபி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், 87 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய  இங்கிலாந்து அணி, தொடர்ச்சியாக 2-வது வெற்றியுடன் அரை இறுதிக்கு நுழைத்து.

சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். ராய் 13 ரன் எடுத்து மில்னி பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து ஹேல்சுடன் இணைந்தார் ஜோ ரூட். சிறப்பாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 81 ரன் சேர்த்தனர்.

ஹேல்ஸ் 56 ரன் எடுத்து (62 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேற, கேப்டன் மார்கன் 13 ரன் எடுத்தார். ஜோ ரூட் 64 ரன் (65 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்டோக்ஸ் 48 ரன் (53 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 311 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ரோங்கி டக் அவுட்டாகி வெளியேற, நியூசி.க்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. கப்தில் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 

வில்லியம்சன் - டெய்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. வில்லியம்சன் 87 ரன் (98 பந்து, 8 பவுண்டரி), டெய்லர் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து கை ஓங்கியது. 

அடுத்து வந்த வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். நியூசிலாந்து 44.3 ஓவரில் 223 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்திய இங்கிலாந்து, ஏ பிரிவில் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிப்பதுடன் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தது.

Trending News