ICC-யிடம் நீதிக்கெட்ட பாக்கிஸ்தான் வாலிபரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!
கிரிக்கெட் மோகம் நகரங்களை காட்டிலும் கிராம மக்களிடம் அதிகமாகவே உள்ளது. தெருக்களில் கிரிக்கட் மட்டையுடன் வளம் வரும் கிராமத்து சிறார்களின் அலப்பரைகளை நம்மால் ரசிகாமல் இருக்க முடியாது.
இந்நிலையில் கிரமாப்புற இளைஞர் ஒருவரின் கிரிக்கெட் சர்வதேச அளவில் பிரபலமாகியுள்ளது. பாக்கிஸ்தானை சேர்ந்த ஹம்சா என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிய போது ஏற்பட்ட விக்கெட் சர்ச்சைக்கு முடிவு தெர்ந்துக்கொள்ள அந்த பதிவின் வீடியோவை ICC-க்க அனுப்பியுள்ளார்.
A fan named Hamza sent this video to us this morning asking for a ruling.
Unfortunately for the (very unlucky) batsman, law 32.1 confirms... Out! pic.twitter.com/y3Esgtz48x
— ICC (@ICC) May 22, 2018
விளையாட்டின் போது அவர் அடித்த பந்து பங்கத்தில் இருந்த கல்லில் பட்டு திரும்பி ஸ்டெம்பில் படுகிறது. இதனால் ஹம்சா விக்கெட் என அறிவிக்கப்படுகின்றார்.
ஆனால் இதை ஏற்க மறுக்கும் ஹம்சா இச்சம்பத்தின் உன்மை நிலைபாடை அறிந்துக்கொள்ள அந்த வீடியோவினை ICC-க்கு அனுப்பிவிட்டார். இந்த வீடியோவினை ஆராய்ந்த ICC, விதி எண் 32.1-ன் படி ஹம்சா விக்கெட் என அறிவித்து அதனை தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளனர்.