IND vs AFG: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..! உலக கோப்பையில் சேஸிங்கில் வரலாறு

உலக கோப்பை 2023: டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. உலக கோப்பை வரலாற்றில் குறைந்த ஓவரில் 273 ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையையும் படைத்தது இந்தியா.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 11, 2023, 09:45 PM IST
  • ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
  • 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • உலக கோப்பை சேஸிங்கில் வரலாறு படைத்தது இந்தியா
IND vs AFG: ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா..! உலக கோப்பையில் சேஸிங்கில் வரலாறு title=

இந்திய அணி வெற்றி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வெற்றி பெற்ற பிறகு, டெல்லியில் 2வது லீக்கில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் சேஸிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். சொந்த மைதானத்தில் களமிறங்கிய விராட் கோலி அரைசதம் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த இரு வெற்றிகள் மூலம் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இந்திய அணி அடுத்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியை அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது. 

மேலும் படிக்க | Rohit sharma Record: ஹிட்மேன் ரோகித் சர்மாவின் சாதனை மழை..! சிக்ஸ் டூ ஆயிரம் ரன்கள்

ஆப்கானிஸ்தான் சொதப்பல்

பேட்டிங்கை பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணி நிதானமாக ஆடி ஓரளவுக்கு கவுரவமான ஸ்கோரை எட்டியது. 50 ஓவர் முடிவில் அந்த அணி 272 ரன்கள் எடுத்தது. டெல்லி பேட்டிங் பிட்ச் என்பதால் பெரிய அளவுக்கு பந்து சுழலவில்லை. இதனால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை 70 ரன்களுக்குள் ஆப்கானிஸ்தான் அணி இழந்தாலும், அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சாஹிதி 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை நல்ல நிலைக்கு எடுத்துச் சென்றனர்.  50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது. ஆனால் பந்துவீச்சில் சொதப்பியது.

ரோகித் சர்மா அதிரடி ஆட்டம்

இதனையடுத்து இந்திய அணி சேஸிங் செய்ய களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா ஒருபுறம் அதிரடியாக ஆடிக் கொண்டிருக்க மறுமுனையில் இஷான் கிஷன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது பங்குக்கு 47 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் சூறாவளியாக ஆடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதமும், 52 பந்துகளில் சதமும் விளாசி அமர்களப்படுத்தினார். இதன் மூலம் குறைந்த பந்தில் உலக கோப்பையில் அரைசதம் அடித்த முதல் இந்தியர், உலக கோப்பையில் அதிக சதமடித்த சர்வதேச கிரிக்கெட் வீரர், குறைந்த இன்னிங்ஸில் உலக கோப்பையில் ஆயிரம் ரன்களை கடந்த வீரர், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். முடிவில் அவர் 84 பந்துகளில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

விராட் கோலி அபார ஆட்டம்

அவருக்கு பிறகு களமிறங்கிய விராட் கோலியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் தன் பங்குக்கு 25 ரன்கள் எடுக்க இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பையில் அதிகவேகமாக 273 ரன்களை சேஸிங் செய்த முதல் அணி என்ற பெருமைக்கும் இந்திய அணிக்கு கிடைத்தது. ஆட்டநாயகனாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 

மேலும் படிக்க | Virat Kholi: சொந்த மைதானத்தை வணங்கி களமிறங்கிய விராட் - நவீன் உல்ஹக்கை கட்டித் தழுவி சமாதானம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News