India vs Australia, 2nd Test: இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது, இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. கவாஜா, ஹேண்ட்ஸ்கோப் மற்றும் கம்மின்ஸின் சிறப்பான ஆட்டத்தினால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் சமி நான்கு விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா மூன்று விக்கடிகளையும் வீழ்த்தினார்.
மேலும் படிக்க | அஸ்வின் புதிய மைல்கல்: ஆஸி-க்கு எதிராக 100 விக்கெட்டுகளை விழ்த்தி சாதனை
cheteshwar1 with the winning runs as #Teamwi
Scps://t.co/hQpFkyZGW8#INDvAUS | @mastercardindia pic.twitter.com/1wrCKXPASU
— BCCI (@BCCI) February 19, 2023
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணியில் வழக்கம் போல டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க தவறினர். தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய பூஜாரா ரன்கள் ஏதும் இன்றி வெளியேறினார். சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த விராட் கோலி 44 ரன்களுக்கு சர்ச்சையான முறையில் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு எட்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த அக்சர் மற்றும் அஸ்வின் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்கள் குவித்தது. நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை இழந்து இருந்தது. இந்நிலையில் மூன்றாம் நாளான இன்று ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் சுழல் ஜாம்பவான்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழலில் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் சிக்கி சின்னா பின்னம் ஆனனர்.
முதல் செஷன் முடிவதற்குள் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா ஏழு விக்கெட்களையும், அஸ்வின் மூன்று விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி நான்கு விக்கெட்களை மட்டுமே இழந்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்று முன்னிலை வகித்துள்ளது.
Congratulations @imVkohli
Simplydia | #INDvAUS | @mastercardindia pic.twitter.com/Ka4XklrKNA
— BCCI (@BCCI) February 19, 2023
2013 முதல் உள்நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி விளையாடிய 44 போட்டிகளில் 36ல் வெற்றி பெற்றுள்ளது. 2 டெஸ்டில் தோல்வி மற்றும் 6 டெஸ்ட் ட்ராவில் முடிந்துள்ளது. மேலும் தொடர்ந்து 4வது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைத்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 2வது இன்னிங்சில் விராட் கோலி சர்வதேச அளவில் 25000 ரன்களை கடந்த முதல் வீரர் என்று பெருமையை பெற்றார். துரடிஸ்டவசமாக இந்த டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா முதல் முறையாக ரன் அவுட் ஆனார் மற்றும் விராட் கோலி முதல் முறையாக ஸ்டம்ப் அவுட் ஆனார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ