IND vs Eng,Day 3: 6 விக்கெட்டை இழந்த இந்தியா.. பாலோ ஆனை தவிர்க்க போராட்டம்

எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழபுக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2021, 08:59 PM IST
  • இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
  • மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களை எடுத்துள்ளது
  • ஃபாலே ஆனை தவிர்க்க இந்தியா 378 ரன்களை கடக்க வேண்டும்
IND vs Eng,Day 3: 6 விக்கெட்டை இழந்த இந்தியா.. பாலோ ஆனை தவிர்க்க போராட்டம் title=

சென்னை: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழபுக்கு 257 ரன்கள் எடுத்துள்ளது.    
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களில் 578 ரன்களை எடுத்து மிகப் பெரிய ஸ்கோரை இந்திய அணிக்கு இலக்காக வைத்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட், 218 ரன்களை எடுத்து அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். இங்கிலாந்து அணியின் சிப்லே, மற்றும் ஸ்டோக்ஸின் ஆட்டமும் நிலையாக அமைந்ததால், 578 என்ற பெரிய இலக்கை எட்டியது இங்கிலாந்து அணி.  

 Also Read | India vs England: சென்னை மைதானத்தில் இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனைகள்

மூன்றாம் நாளான இன்று இந்திய அணி (Team India) தனது முதல் இன்னிங்க்ஸை  விளையாடத் தொடங்கியது. ரோகித், கில், கோலி, ரஹானே என இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சோபிக்காத நிலையில், இந்திய அணி தடுமாறியது. அதன் பிறகு களம் இறங்கிய பந்துடன் புஜாரா கூட்டு சேர்ந்து, இருவரும் 119 ரன்கள் எடுத்தனர்.  

புஜாரா 73 ரன்களிலும், பந்த் 91 ரன்களிலும் ஆட்டம் இழக்க, 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 257 ரன்களை குவித்துள்ளது. வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணியின் பெளலர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க வேண்டுமானால் 378 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க வேண்டும். இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி 20 தொடர் அகமதாபாத்தில் நடைபெறும். அதன் பிறகு, புனேவில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும்.  நாளை தான் இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்குமா என்பது தெளிவாகும்.

ALSO READ: IND vs ENG முதல் டெஸ்ட் போட்டியின் முக்கியத்துவம் என்ன தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News