இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 17, 2022, 04:03 PM IST
  • இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம்
  • விராட் கோலிக்கு ஓய்வு
  • தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் - தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு title=

ஐபிஎல் போட்டிகள் தற்போது நடந்துவருகின்றன. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தற்போது ஐபிஎல்லில் விளையாடிவருகின்றனர். நடப்பு ஐபிஎல் முடிந்ததும் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் 5 டி20 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரவிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடவிருக்கிறது.

இந்தத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படவிருக்கிறது.

India

எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவோ அல்லது ஷிகர் தவானோ நியமிக்கப்படலாம் என பிசிசிஐ வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும் படிக்க | இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்த வீரர் நிச்சயம் இடம் பெறமாட்டார்

இந்நிலையில் இந்தத் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் விவரம் பின்வருமாறு:

குயிண்டன் டி காக்,டெம்பா பவுமா, ரீஸா ஹெண்ட்ரிஸ், கிளாசென், கேஷவ்   மஹாராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, பர்னெல்,நோர்ஜே , டுவைன் பிரிட்டோரியஸ் , ககிசோ ரபாடா, ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வான்டர் டூசென், மார்கோ ஜான்சன்.

மேலும் படிக்க | விளையாடாத இவருக்கு 9.2 கோடி ரூபாய் தேவையா? லக்னோ பரிதாபம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Trending News