ஒப்பந்தத்தை மீறினாரா தினேஷ் கார்த்திக்; BCCI அதிரடி முடிவு!

இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது மத்திய ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக BCCI நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

Updated: Sep 7, 2019, 08:02 AM IST
ஒப்பந்தத்தை மீறினாரா தினேஷ் கார்த்திக்; BCCI அதிரடி முடிவு!

இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தனது மத்திய ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்களை மீறியதற்காக BCCI நோட்டீஸ் அனுப்பியுள்ளது!

வியாழக்கிழமை நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் 2019-ன் தொடக்க ஆட்டத்தின் போது டிரிபாகோ நைட் ரைடர்ஸ் டிரஸ்ஸிங் அறையில் கார்த்திக் காணப்பட்டார். BCCI வீரர் ஒப்பந்தத்தின்படி, குழுவின் முன் அனுமதியின்றி வீரர்கள் வேறு எந்த விளையாட்டு நடவடிக்கை அல்லது விளையாட்டிலும் பங்கேற்கவோ அல்லது கலந்துகொள்ளவோ ​​அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் BCCI அனுமதி இன்றி கரீபியன் பிரீமியர் லீக் 2019 தொடர் நடவடிக்கைகளில் காணப்பட்ட கார்த்திக்கிற்கு BCCI தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோஹ்ரி கையெழுத்திட்ட நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

கார்த்திக்கின் பதில் வந்தவுடன் நிர்வாகிகள் மூன்று பேர் கொண்ட குழு இந்த விஷயத்தில் தீர்ப்பளிக்கும் என்பது தெரிகிறது.

டிரிபாகோ நைட் ரைடர்ஸுடன் உரிமையாளர்களைப் பகிர்ந்து கொள்ளும் IPL அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். இந்நிலையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஜெர்சியில், பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் மற்றும் அபிஷேக் நாயர் ஆகியோருக்கு அருகில் தினேஷ் கார்த்திக் காணப்பட்டது(நேரடி ஒளிப்பரப்பில்) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

34 வயதான கார்த்திக் கடைசியாக இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார். நியூசிலாந்திடம் அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி கண்ட போது, தனது சிறப்பான ஆட்டத்தினை தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்த தவறினார்.

அப்போதிருந்து, கார்த்திக் ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 அணிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் மட்டும் காணப்பட்டார். எவ்வாறாயினும், செப்டம்பர் 24 முதல் தொடங்கவிருக்கும் விஜய் ஹசாரே டிராபிக்கு அவர் தமிழக கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.