உலக கோப்பை 2019 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்., தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

Last Updated : Jun 5, 2019, 10:55 PM IST
உலக கோப்பை 2019 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா! title=

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்., தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!

இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 8-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆம்லா 6(9), குவிண்டன் டீ காக் 10(17) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற துவங்கினர். அணியில் அதிகப்பட்சமாக கிறிஸ் மோறிஸ் 42(34) ரன்கள் குவித்தார்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் யுவேந்திர சாஹல் 4 விக்கெட், புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா இறுதி வரை நின்று விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 144 பந்துகளில் 122 ரன்கள் குவித்தார் ரோகித் ஷர்மா, இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 13 நான்குகள் அடங்கும். எனினும் மறுமுனையில் விளையாடிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவுளியன் திரும்பியது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

ஆட்டத்தின் 47.3-வது பந்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்த இந்தியா உலக கோப்பை 2019 தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதே வேளையில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய தென்னாப்பிரிக்கா தொடர்ந்து மூன்று தோல்விகளை கண்டு இக்கட்டான நிலையில் உள்ளது.

Trending News