இந்தியா vs ஆஸி 2வது டி20 இன்று: தொடரை வெல்லுமா இந்தியா?

Last Updated : Oct 10, 2017, 09:28 AM IST
இந்தியா vs ஆஸி 2வது டி20 இன்று: தொடரை வெல்லுமா இந்தியா? title=

இந்தியா – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடிவருகிறது. ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டி20 போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் முதல் போட்டி அக்டோபர் 7-ம் தேதி ராஞ்சியில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 1-0 எனும் கணக்கில் முன்னிலையும் பெற்றது. 

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் போட்டி கௌகாத்தியில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டி இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கும்.

Trending News