இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு

Last Updated : Nov 2, 2016, 02:51 PM IST
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு title=

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் காம்பிர், பாண்ட்யா, இஷாந்த் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே  ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறயுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே பயிற்சி ஆட்டம் எதுவும் கிடையாது. முதல் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. 2_வது டெஸ்ட் போட்டி நவம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடைபெறும். முதலிரண்டு டெஸ்ட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று தேர்வுக்குழு மும்பையில் தேர்வு செய்தது.

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய கவுதம் காம்பிர் மீண்டும் இடம் பிடித்துள்ளார். ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யாவுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இடபெற்று உள்ளார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் ஷிகர் தவான், ரோகித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை.

இந்திய அணி விவரம்:-

விராட் கோலி (கேப்டன்), ஆர்.அஸ்வின், கவுதம் கம்பீர், ரவிந்தர் ஜடேஜா, அமித் மிஸ்ரா, முகமது சமி, புஜாரா, ரெகானே, விருதிமான் சாகா, கருண் நாயர், முரளி விஜய், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ்.

 

 

Trending News