IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுப்மான் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 16, 2024, 04:10 PM IST
  • சும்பான் கில்லுக்கு கழுத்தில் காயம்.
  • முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்.
  • மாற்று வீரரை இந்திய அணி தேர்வு செய்துள்ளது.
IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! title=

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியா தொடங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து தொடரை எதிர்கொள்கிறது. இந்த அணியில் யாஷ் தயாளுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் பேட்டர் ஷுப்மான் கில் விலகக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கில்லுக்கு கழுத்து மற்றும் தோள்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளதால் விலகலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | மீண்டும் கேப்டனாகும் ரோஹித்? - இப்போதே மும்பை அணி கொடுத்த பெரிய சிக்னல்!

பயிற்சியின் போது காயம்

அக்டோபர் 14ம் தேதி கில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போது வலி ஏற்பட்டதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. இதனால் முதல் டெஸ்டில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை போட்டி தொடங்கி இருந்தால் கில் காயம் குறித்த முழு விவரம் தெரிய வந்து இருக்கும். ஆனால் மழையின் காரணமாக டாஸ் போடாமலேயே முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் நேற்றைய பயிற்சியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. சுப்மான் கில் காயம் சரியாகவில்லை என்றால் அவருக்கு பதில் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கான் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து தொடரில் விளையாடாத ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக இரட்டைச் சதம் அடித்து அசத்தி இருந்தார் சர்பராஸ் கான். எனவே கில் முதல் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும். சமீபத்திய தொடர்களில் ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வந்த கில் சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 119 ரன்கள் எடுத்தார். 2வது டெஸ்டில் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

மேலும் இந்திய அணியில் கூடுதல் வீரர்களாக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், ஆல்-ரவுண்டர் நிதிஷ் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளதால் இளம் வீரர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை கண்காணிக்க அணியில் இடம் பெற்றுள்ளனர் என்று செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா தெரிவித்தார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரித் பும்ரா (VC), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பந்த் (WC), துருவ் ஜூரல் (WC), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப்

மேலும் படிக்க | ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வந்தால்... கப்புனு தூக்கக் காத்திருக்கும் இந்த 3 அணிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News