இந்தியா vs நியூசிலாந்து: வான்கடே பிட்ச் ஸ்லோவா இருக்கும் ... அப்போ டாஸ் ஜெயித்தால் என்ன செய்யணும்?

இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை 2023 இன் முதல் அரையிறுதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. ரன் மழை பொழியக் கூடிய மைதானத்தில் டாஸ் ஜெயித்தால் இரு அணி கேப்டன்களும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 15, 2023, 10:19 AM IST
  • மும்பை பிட்ச் ஸ்லோவாக இருக்கும்
  • டாஸ் ஜெயித்தால் என்ன செய்ய வேண்டும்?
  • சேஸிங் செய்தால் வெற்றி பெற முடியுமா?
இந்தியா vs நியூசிலாந்து: வான்கடே பிட்ச் ஸ்லோவா இருக்கும் ... அப்போ டாஸ் ஜெயித்தால் என்ன செய்யணும்? title=

இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை 2023 -ன் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அதாவது நவம்பர் 15 ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் ரன் மழை பொழியக் கூடிய மைதானம். இந்த மைதானத்தில் பெரும்பாலும் ஒருநாள் கிரிக்கெட்டில், டாஸ் வென்ற அணிகள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகின்றன. இரண்டாவது இன்னிங்ஸில் லைட் வெளிச்சத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினம். இங்கு இதுவரை மொத்தம் 27 ஆட்டங்கள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 14 ஆட்டங்களிலும், சேசிங் அணி 13 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம், 2023 உலகக் கோப்பையில், இந்த மைதானத்தில் நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில், முதலில் பேட்டிங் செய்யும் அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

இந்தியா vs நியூசிலாந்து பிட்ச்

உலகக் கோப்பை 2023 லீக் கட்டத்தில் வான்கடே மைதானத்தில் மொத்தம் 4 போட்டிகள் நடைபெற்றன. இந்த நான்கு போட்டிகளில், 350 ரன்கள் மூன்று முறை அடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே சேசிங் அணி 100 ரன்களுக்குள் சுருண்டது. முதல் போட்டியில் இங்கிலாந்துக்கு 400 ரன்கள் இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா, 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி 382 ரன்களை விளாசி, பங்களாதேஷை 282 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது.

மேலும் படிக்க | உலக கோப்பை: 3 போட்டிகளில் வெறும் 11 ரன்கள் அடித்த விராட் கோலி - மோசமான ரெக்கார்டு..!

இந்தியா 55 ரன்களுக்கு இந்த மைதானத்தில் தான் சுருட்டியது. முதலில் ஆடி 357 ரன்கள் அடித்த இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்த உலக கோப்பையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சேஸிங்கில் ஒரே ஒரு போட்டியில் வெற்றி கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றியை ருசித்து. கிளென் மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடி 201 ரன்கள் குவித்து தனி ஒருவராக ஆஸ்திரேலிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 291 ரன்களை எடுக்க, பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 91 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. அங்கிருந்து தான் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் தொடங்கி, வெற்றி பெறும் வரை தொடர்ந்தது.

வான்கடே ஸ்டேடியம் ரெக்கார்ட்ஸ்

மொத்த ஒருநாள் போட்டிகள்: 27

முதலில் பேட்டிங் செய்யும் போது வென்ற போட்டிகள்: 14

முதலில் பந்துவீசி வென்ற போட்டிகள்: 13

முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர்: 261

அதிகபட்ச மொத்தம்: 438/4 தென்னாப்பிரிக்கா vs இந்தியா

சேஸிங்கின் போது அதிகபட்ச ஸ்கோர்: 293/7 ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது

குறைந்த ஸ்கோர்: இலங்கை அணி 55 ரன்கள்

குறைந்த ஸ்கோர் பாதுகாக்கப்பட்டது: 192/9 இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக,  

மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா - ராகுல், ஸ்ரேயாஸ் சதம் ... நெதர்லாந்து பவுலரும் சதம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News