IND vs SA: வாழ்வா? சாவா? போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 14, 2022, 10:31 AM IST
  • இந்தியா - தென்னாப்பிரிக்கா 3வது 20 ஓவர் போட்டி
  • இரவு 7 மணிக்கு விசாகப்பட்டனத்தில் நடைபெறுகிறது
  • வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும்
IND vs SA: வாழ்வா? சாவா? போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் இந்தியா title=

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டனத்தில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே 5 போட்டிகள் கொண்ட தொடரில் நீடிக்க முடியும். இல்லையென்றால் தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 3வது போட்டியில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றிவிடும்.

மேலும் படிக்க | ஐபிஎல்-ல் ஒரு போட்டியின் மதிப்பு இத்தனை கோடியா? வெளியான தகவல்!

முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. முதல் போட்டியில் பேட்டிங்கில் ஜொலித்த இந்திய அணி, பந்துவீச்சில் கோட்டைவிட்டது. இதனால், 200 ரன்களுக்கு மேல் அடித்தபோதும் தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவியது. 2வது போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் இல்லை. இதனால் 150 ரன்களுக்குள்ளாக சுருண்டு, தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தது.

டாப் ஆர்டர்கள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளிலும் தொடக்கம் இதுவரை சிறப்பாக இருக்கவில்லை. இஷான் கிஷனின் பேட்டிங் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், ஒரு அணியாக ஒவ்வொரு வீரரும் பங்களிப்பு செய்ய தவறுவதால், தோல்வியை தவிர்க்க முடியவில்லை. கேப்டன் ரிஷப் பன்ட்டின் பேட்டிங்கும் மோசமாக இருக்கிறது. கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை இக்கட்டான சூழ்நிலைகளில் அவர் எடுக்கும் முடிவு, இதுவரை அவருக்கு பாதகமாகவே அமைகிறது. கடந்த இரு போட்டிகளிலும் செய்த தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே தென்னாப்பிரிக்காவை வீழ்த்த முடியும். 

அந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கட்டுக்கோப்பாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது. பேட்டிங்கில் மில்லர் மற்றும் வாண்டர் டெசன் ஆகியோர் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கின்றனர். இவர்களை கட்டுப்படுத்தினால் இந்திய அணி வெற்றி குறித்து சற்று யோசித்து பார்க்கலாம். வாழ்வா? சாவா? என்ற சூழலில் இந்திய அணி களமிறங்குவதால், இந்தப் போட்டியை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கியுள்ளனர்.  இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 

மேலும் படிக்க | IND Vs SA 2nd T20: ஒரே மேட்சில் பல சாதனைகளை படைத்துள்ள இந்திய பவுலர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News