INDvsWI: போட்டி tie ஆனாதால், இந்திய அணி இரு சாதனை படைத்துள்ளது!

இந்தியா - மேற்கிந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற இரண்டாவது போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிந்தது, எனினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அனைவரது மனதினையும் வென்றுள்ளார்.

Last Updated : Oct 25, 2018, 11:43 AM IST
INDvsWI: போட்டி tie ஆனாதால், இந்திய அணி இரு சாதனை படைத்துள்ளது! title=

இந்தியா - மேற்கிந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற இரண்டாவது போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிந்தது, எனினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி அனைவரது மனதினையும் வென்றுள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடைபெறவுள்ள 5 ஒருநாள் போட்டி கொண்ட ஒருநாள் தொடர் கடந்த அக்டோபர் 21-ஆம் நாள் துவங்கி நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி விஷாகப்பட்டினம் ADC-VDCA மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 157(129), அம்பத்தி ராயுடு 73(80) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். மேற்கிந்தியா தரப்பபில் அஷ்லே நர்ஸ்ர ஓபெட் மெகோலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சுமாரான தொடக்கத்தை அளித்தாலும் தொடரந்து களமிறங்கிய ஷாய் ஹோப் 123(134), ஹெட்மையரின் 94(64) அதிரடி ஆட்டத்தால் மேற்கிந்திய அணியும் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்தி ஆட்டம் முடிவு இன்றி ட்ராவில் முடிக்கப்பட்டது. ஆட்டத்தி நாயகன் விருதினை நேற்றைய ஆட்டத்தில் சாதனைகள் பல படைத்த விராட் கோலிக்கு அளிக்கப்பட்டது.

INDvsWI போட்டியில் வரலாற்று நிகழ்வுகள் சில...

முடிவு இன்றி ட்ராவில் முடிந்த போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர்கள்...

  1. 2011-ஆம் ஆண்டு | இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் A ஸ்டாவஸ் | 158 ரன்கள்
  2. 2018-ஆம் ஆண்டு | மேற்கிந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கோலி | 157* ரன்கள்
  3. 2008-ஆம் ஆண்டு | இங்கிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் J ஹோவ் | 139 ரன்கள்

முடிவு இன்றி ட்ராவில் போட்டிகளை முடித்த அணி...

  1. மேற்கிந்தியா - 10 போட்டிகள்
  2. இத்ந்திய / ஆஸ்திரேலியா - 9 போட்டிகள்
  3. இங்கிலாந்து / பாக்கிஸ்தான் - 8 போட்டிகள்
  4. ஜிம்பாபேவே - 7 போட்டிகள்
  5. நியூசிலாந்து / தென்னாப்பிரிக்கா - 6 போட்டிகள்

Trending News