இந்திய வீரர்கள் பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்துள்ளது!

Updated: Aug 3, 2019, 09:42 PM IST
இந்திய வீரர்கள் பந்துவீச்சில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள் அணி!
Pic Courtesy: twitter/@BCCI

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்துள்ளது!

மேற்கிந்தியா சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து மேற்கிந்திய தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜான் கேம்பெள் 0(2), மற்றும் எவின் லிவிஸ் 0(4) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த நிக்கோலஸ் பூரன் 20(16) ரன்கள் குவித்தார். மறு முனையில் கிரன் பொல்லார்ட் நிதானமாக விளையாடி 49(49) ரன்கள் குவித்தார்.

எனினும் இவரை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய வீர்ரகள் களமிறங்கவுள்ளனர்.

இந்தியா தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் குவித்தனர்.