இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்றன. இந்தச் சூழலில் தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்களை எடுத்தது. கேமரூன் க்ரீன் 52 ரன்களும், டிம் டேவிட் 54 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், சாஹல், ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் வீராட் கோலி (63 ரன்), சூர்யகுமார் யாதவ் (69 ரன்) சிறப்பாக விளையாடினர். இந்தியா 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
For his breathtaking batting display in the chase, @surya_14kumar bags the Player of the Match award.
Scorecard https://t.co/xVrzo737YV #TeamIndia | #INDvAUS pic.twitter.com/YrvpUyDTxt
— BCCI (@BCCI) September 25, 2022
இந்நிலையில் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா, ஹ்”ஹைதராபாத் ஒரு சிறப்பான இடம். இந்திய அணி மற்றும் ஐபிஎல் போட்டி என எங்களுக்கு நிறைய நினைவுகள் உண்டு. இது ஒரு சிறந்த தருணம். நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினோம். அதை சிறப்பாக செய்தோம். வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகப்பெரிய பலமாகும். சில நேரங்களில் நிறைய விஷயங்களை செய்யும்போது தவறு செய்யலாம். இது 20 ஓவர் கிரிக்கெட்.
மேலும் படிக்க | அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர்! புவனேஷ்குமார் இடம் பறிபோகிறதா?
தவறுகள் மிக குறைவாக இருக்க வேண்டும். நாங்கள் எங்களுக்கான வாய்ப்புகளை எடுத்துக்கொண்டு தைரியத்துடன் செயல்பட்டதாக நினைக்கிறேன். அது சில நேரங்களில் வராமல் போகலாம். ஆனால் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் நிறைய பகுதிகளில் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக கடைசி கட்ட பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவது அவசியம். பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சிறப்பான பாதைக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்” என கூறினார்.
மேலும் படிக்க | கோப்பையை பெற்றதும் ரோஹித் செய்த காரியம்: வைரலாகும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ