49 ரன்களுக்குச் சுருண்டு கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தது.
ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.3 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. சுனில்நரின் அதிகபட்சமாக 17 பந்தில் 34 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். யசுவேந்திர சகால் 3 விக்கெட்டும் பவான் நெகி, டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
வெற்றிக்குத் தேவை 132 ரன்கள் தேவை என்ற நிலையில் பெங்களூரு அணி ஆட தொடங்கியது. கொல்கத்தா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் 9.4 ஓவர்களில் 49 ரன்னில் சுருண்டது. இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 82 ரன்னில அபார வெற்றி பெற்றது.
49 ரன்னில் சுருண்டதன் மூலம் பெங்களூர் அணி ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்தபட்ச ரன்னை எடுத்து மோசமான நிலையை எட்டியது. எந்த ஒரு வீரரும் இரட்டை இலக்கத்தை எடுக்கவில்லை
ஆர்சிபி வீரர்கள் ஸ்கோர் இதோ: 7, 0, 1, 8, 9, 8, 2, 0, 2, 5, 0. உதிரிகள் 7. மொத்தம் 9.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 49 ரன்களையே எடுத்தது ஆர்சிபி. கேதர் ஜாதவ் அதிகபட்சமாக 9 ரன் எடுத்தார். நாதன் கோல்ட்டர், கிறிஸ் வோக்ஸ், கிரண்ட்ஹோம் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
கொல்கத்தா அணி 8-வது ஆட்டத்தில் புனேயே 26-ந்தேதியும், பெங்களூர் அணி 8-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத்தை நாளையும் சந்திக்கின்றன.