ஐபிஎல் 2017: பெங்களூர் - புனே இன்று மோதல்

Last Updated : Apr 16, 2017, 05:51 PM IST
ஐபிஎல் 2017: பெங்களூர் - புனே இன்று மோதல் title=

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன. 

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், மும்பையிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.

புனே அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க புனே அணி கடுமையாக போராட வேண்டும்.

இரு அணிகளும் மோதி இருந்த 2 ஆட்டங்களில் பெங்களூர் அணியே வெற்றி பெற்று இருந்தது.

Trending News