IPL 2020: அவசர அவசரமாக இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா... என்ன காரணம்?...

சிஎஸ்கே பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பியுள்ளார்.... ஐபிஎல் 2020 சீசனில் விளையாடும் மற்றொரு வாய்ப்பையும் இழந்துள்ளார்..!

Last Updated : Aug 29, 2020, 11:47 AM IST
IPL 2020: அவசர அவசரமாக இந்தியா திரும்பிய சுரேஷ் ரெய்னா... என்ன காரணம்?... title=

சிஎஸ்கே பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பியுள்ளார்.... ஐபிஎல் 2020 சீசனில் விளையாடும் மற்றொரு வாய்ப்பையும் இழந்துள்ளார்..!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என CSK அணியின் CEO விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் சொந்த காரணத்திற்காக அவர் இந்தியா திரும்பினார்.

கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு வரும் செப்.,19ம் தேதி தொடங்குகிறது. இதற்காக, IPL தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 5 நாள் பயிற்சியை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து, தோனி தலைமையிலான சென்னை அணியினர் கடந்த 21 ஆம் தேதி தனி விமானத்தில் சென்னையில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு சென்றனர். அங்கு வீரர்கள் கொரோனா பரிசோதனைக்குப் பிறகு 6 நாட்கள் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டனர்.

ALSO READ | ஐபிஎல் விளையாட UAE சென்ற CSK அணியில் பந்து வீச்சாளர் உட்பட பலருக்கு கொரோனா தொற்று

இந்நிலையில், கொரோனா பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியைச் சேர்ந்த வீரர் யார் என்ற விபரம் வெளியிடவில்லை. இதைத் தொடர்ந்து, சென்னை அணியினரின் தனிமைப்படுத்தும் காலத்தை அணி நிர்வாகம் மேலும் நீட்டித்துள்ளது. 

இதை தொடர்ந்து CSK பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் வீடு திரும்பியுள்ளார். மேலும், முழு IPL 2020 சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் உறுதிப்படுத்தினார். ரெய்னா திரும்புவதற்கான சரியான காரணம் தெளிவாக இல்லை என்றாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. 

Trending News