இந்தியா, கிரிக்கெட் ரசிகர்களின் நாடு. இங்கு ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் ஒரு கொண்டாட்டம்தான். அந்த கொண்டாட்டத்திற்கு முத்தாய்ப்பாய் வந்ததுதான் இந்தியன் பிரிமியர் லீக் (IPL) . ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் IPL போட்டிகள் திருவிழாக்களாய்தான் நடந்துள்ளன. இந்த போட்டிகளின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்!!
2021 ஆம் ஆண்டு IPL பதிப்பு பாதி நடந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக தடைபட்டது. தற்போது மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த மாதம் தொடங்கவுள்ளன. இந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு, IPL போட்டிகள் தொடர்பான முக்கிய செய்தி ஒன்று வந்துள்ளது.
2019 பதிப்புக்குப் பிறகு முதல் முறையாக IPL-லில் பார்வையளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை IPL தலைமை இயக்க அதிகாரி ஹேமாங் அமின் செவ்வாயன்று அணி உரிமையாளர்களுக்குத் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. IPL 2021-ன் இரண்டாம் பாதியில் ரசிகர்கள் "குறைந்த அளவில்" அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
மே மாத தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல், செப்டம்பர் 19 முதல் மீண்டும் தொடங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும்.
ALSO READ: ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் அடுத்த மாதம் இடம்பெறும்; வீரர்களின் ஏலம் எப்பொழுது?
ஐபிஎல் புதன்கிழமை ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டது. போட்டிகளுக்கு ரசிகர்கள் மீண்டும் வருவது ஒரு "முக்கியமான" விஷயம் என்றும், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் கோவிட் -19 தொற்றுநோய் விதிமுறைகளின் படி, மூன்று இடங்களிலும் குறைந்த அளவிலான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும், விற்பனைக்கு வெளியிடப்படும் டிக்கெட்டுகளின் சதவீதத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் 2021 ஆண்கள் டி 20 உலகக் கோப்பைக்கான ஒரு ஒத்திகையாகவும் இது இருக்கும். உலகக் கோப்பையின் முதல் சுற்று ஓமனில் விளையாடப்படும். சூப்பர் 12 போட்டிகளும் நாக் அவுட் போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தால் நடத்தப்படும்.
கொரோனா தொற்றுநோய்களுக்கு மத்தியில் நடத்தப்படும் ஐபிஎல்-லின் இரண்டாவது பதிப்பு இதுவாகும். 2020 ஆம் ஆண்டிலும், பிசிசிஐ (BCCI) ஐபிஎல்-ஐ ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றியது. அங்கு அனைத்து போட்டிகளும் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டன.
இந்த ஆண்டு ஐபிஎல் ஏப்ரல் 9 அன்று இந்தியாவில் தொடங்கியது. ஆனால் பல்வேறு அணிகளில் பலருக்கு தொற்று ஏற்பட்டத்தால், மே 3 அன்று போட்டிகள் காலவரையின்றி இடைநிறுத்தப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பெரும்பான்மையான பொதுமக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதே ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும்.
IPL 2021-ன் மீதமுள்ள போட்டிகளுக்கு, செப்டம்பர் 16 முதல், அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.iplt20.com அல்லது PlatinumList.net இல் ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கலாம்.
ALSO READ: IPL 2021: ரசிகர்களுக்கு அதிர்ச்சி, இந்த வீர்ரகள் IPL-லில் விளையாட மாட்டார்கள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR