ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. இதற்கிடையில், பல கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை நோகடிக்கும் ஒரு செய்தி வந்துள்ளது. சில முக்கிய 2 நட்சத்திர வீரர்கள் (2 Star Players) தற்போதைய சீசனில் இருந்து தங்கள் பெயர்களை திரும்பப் பெற்றுள்ளனர்.
பெர்ஸ்டோவ்-மலான் ஐபிஎல்லில் இருந்து வெளியேறினர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் டேவிட் மலான் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் ஐபிஎல் 2021 (IPL 2021) இல் இருந்து விலக முடிவு செய்துள்ளனர். இந்த இரண்டு வீரர்களும் தற்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாக உள்ளனர்.
கொரோனா பதற்றத்தை அதிகரித்தது
இங்கிலாந்து மற்றும் இந்தியாவின் வீரர்கள் தங்கள் ஐபிஎல் அணிகளில் சேர, சார்டர் விமானங்கள் மூலன் 'பபிள் டு பபிள் ட்ரான்ஸ்ஃபர்' ஆக வேண்டும் என்ற விதி இருந்தது. இந்திய முகாமில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரு நாடுகளுக்கிடையே நடைபெறவிருந்த 5 வது டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு, IPL அணிகளின் நிர்வாகங்கள் வீரர்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளை தாங்களே செய்ய வேண்டி உள்ளது.
இந்திய அணியின் முகாமில் கொரோனா
இந்திய அணியின் பிசியோ உதவியாளர் யோகேஷ் பர்மார் கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்பட்டதால் 5 வது டெஸ்ட் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, ஓவலில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது கோவிட் -19 தொற்று உறுதியானதால், அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மற்ற துணை பணியாளர்கள் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
ஐபிஎல்லிலிருந்து விலகுவதற்கு தனிமைப்படுத்தல் காரணமா?
துபாய்க்கு வரும் அனைத்து வீரர்களும் இப்போது 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும். பிரஸ்டோவ் மற்றும் மலான் லீக்கில் இருந்து வெளியேற இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐயிடம், "செப்டம்பர் 19 முதல் மீண்டும் விளையாடப்படும் ஐபிஎல்லில் இந்த இரு வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள்." என்று கூறினார்.
பெர்ஸ்டோவ் மற்றும் மலான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல மாட்டார்கள்
பிசிசிஐ (BCCI) அதிகாரி, 'அவர்கள் யுஏஇ-க்கான விமானத்தில் ஏறமாட்டார்கள். தற்போது கட்டாயமாகியுள்ள 6-நாள் தனிமைப்படுத்தல் அவர்களது விலகலுக்கு ஒரு காரணம்.' என்று தெரிவித்தார். பெர்ஸ்டோ சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரர் ஆவார். உலகின் நம்பர் ஒன் டி 20 பேட்ஸ்மேன் மலான் இந்த ஆண்டு துவக்கத்தில், கிங்ஸ் அணியுடன் இணைந்து ஐபிஎல்-லில் அறிமுகமானார்.
கிறிஸ் வோக்ஸ் ஆடுவதிலும் சஸ்பென்ஸ்
பெர்ஸ்டோ மற்றும் மலான் இருவரும் மான்செஸ்டரில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் ஒரு பகுதியாக இருந்தனர். தில்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ஆடுவாரா என்பதிலும் சந்தேகம் உள்ளது.
பயோ பபிள் தான் காரணமா?
பயோ-பப்பிளில் இருப்பது வீர்ரகளுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. ஐபிஎல் 2021 க்குப் பிறகு, டி 20 உலகக் கோப்பையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல்-லிலிருந்து விலகும் வீரர்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
ALSO READ:கொரோனா ஏற்படுத்திய சிக்கல்; India vs England 5வது டெஸ்ட் போட்டி ரத்து..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR