IPL 2023 CSKvsGT: டாஸ் போடும் போது வருத்தப்பட்ட தோனி..! ரசிகர்களுக்காக என்ன சொன்னார் தெரியுமா?

IPL 2023 Final CSKvsGT: டாஸ் போடும்போது பேசிய தோனி, ஐபிஎல் இறுதிப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறாததால், அதிகம் பாதிக்கப்பட்டது ரசிகர்கள் தான் அவர்கள் மீண்டும் வந்திருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 29, 2023, 07:47 PM IST
  • டாஸ் வெற்றி பெற்ற சிஎஸ்கே பவுலிங்
  • ரசிகர்களுக்காக வருத்தப்பட்ட தோனி
  • என்ன சொன்னார் தெரியுமா?
IPL 2023 CSKvsGT: டாஸ் போடும் போது வருத்தப்பட்ட தோனி..! ரசிகர்களுக்காக என்ன சொன்னார் தெரியுமா? title=

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பவுலிங் தேர்வு செய்தார். மழை அச்சுறுத்தல் இருப்பதால், அதற்கேற்ப விளையாட வேண்டியிருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பவுலிங் தேர்வு செய்ததாக கூறினார். மேலும், ரசிகர்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும், அவர்கள் மீண்டும் இன்றைய போட்டியை  கண்டுகளிக்க வந்திருப்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார்.

மேலும் படிக்க | மாஸ்டர் vs மாணவன்: மீண்டும் சாம்பியனாகுமா சிஎஸ்கே... பைனலில் பந்தயம் அடிக்கும் வீரர்கள் யார் யார்?

சூப்பர் கிங்ஸ் vs டைட்டன்ஸ் பலப்பரீட்சை

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி நேற்று நடைபெறுவதாக இருந்தது. மழை வெளுத்து வாங்கியதால் போட்டி கைவிடப்பட்டு ரிசர்வ் நாளான இன்று தொடங்கியது. நேற்றைய போட்டிக்காக டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், இன்று அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் டாஸ் போட வந்தனர். 7 மணிக்கு போடப்பட்ட டாஸில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

தோனி நெகிழ்ச்சி

டாஸ் வெற்றி பெற்ற பிறகு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, " நாங்கள் பந்துவீசுகிறோம். மழை அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் சூழலுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும் என்பதால் பந்துவீச்சை தேர்வு செய்கிறோம். நேற்று மழை பெய்தபோது நாங்கள் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தோம். ஒரு வீரராக எப்போதும் விளையாடவே விரும்புவோம். ஆனால் மழையால் அது நடக்கவில்லை. ரசிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிச்சயம் இந்த போட்டி விருந்தாக இருக்கும் என நம்புகிறோம். 20 ஓவர் போட்டியாக நடைபெற இருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா நம்பிக்கை

ஹர்திக் பாண்டியா பேசும்போது, நாங்களும் டாஸில் வெற்றி பெற்றால் பந்துவீசவே முடிவு செய்திருந்தோம். ஆனால், அதுபற்றி பெரிதாக யோசிக்க தேவையில்லை. நம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அந்த அணியிடம் நிச்சயமாக கோப்பை இருக்கிறோம். நாங்கள் ரிலாக்ஸாகவே இருக்கிறோம். சிறப்பாக விளையாடுவோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | CSKvsGT IPL 2023 Final: ஐபில் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன ஆகும்? ரூல்ஸ் இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News