IPL 2023: வார்னருக்கு அதிர்ஷ்டம்..பந்து பட்டும் விழாத ஸ்டம்ப்..! ஷமிக்கு ஷாக்

டெல்லி ஐபிஎல் போட்டியில் வார்னர் பேட்டிங் செய்யும்போது ஷமி வீசிய பந்து ஸ்டம்பில் பட்டும் பெய்ல்ஸ் விழாதது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதனால் முதல் ஓவரிலேயே கண்டத்தில் இருந்து தப்பினார் டேவிட் வார்னர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 4, 2023, 08:19 PM IST
  • வார்னருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
  • அவுட்டில் இருந்து தப்பிழைத்தார்
  • ஷமிக்கு காத்திருந்த அதிர்ச்சி
 IPL 2023: வார்னருக்கு அதிர்ஷ்டம்..பந்து பட்டும் விழாத ஸ்டம்ப்..! ஷமிக்கு ஷாக் title=

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் லீக் போட்டியில் களமிறங்கின. டாஸ் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் டெல்லி அணியில் பிரித்திவி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஓப்பனிங் இறங்கினார். முதல் ஓவரை வீசிய முகமது ஷமி சிறப்பாக வீசி வார்னருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தார்.  அந்த ஓவரில் ஒவ்வொரு பந்தையும் உள்ளே வெளியே என மாற்றி போட்டு கிலி ஏற்படுத்தினார் ஷிமி. மறுமுனையில் பேட்டிங் செய்து கொண்டிருந்த வார்னர் எப்படியாவது இந்த ஓவரை சமாளித்தால் போதும் என நினைத்து, பேட்டில் அடிக்க தேடிக் கொண்டிருந்தார். ஆனால் அவரது தேடலில் பந்து சிக்கவில்லை.

மேலும் படிக்க | CSK போட்டியை நிறுத்திய நாய்: துரத்த படாதுபாடுபட்ட ஊழியர்கள் - கவாஸ்கர் காட்டம்

இதனால் ஆடிப்போன வார்னர் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் விழித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஷமி வீசிய பந்து ஸ்டம்பை பதம்பார்த்து கீப்பர் கையில் தஞ்சம் புகுந்த நிலையில், பெய்ல்ஸ் மட்டும் விழவில்லை. இது பந்துவீச்சாளர் ஷமி மற்றும் விக்கெட் கீப்பர் சஹாவுக்கு வியப்பை கொடுத்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என நினைத்துக் கொண்டு அசுர வேகத்தில் அடுத்த பந்தை வீச சென்றார் ஷமி. அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காமல் இல்லை. பிரித்திவி ஷா மற்றும் மார்ஷ் என இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அடுத்தடுத்து எடுத்தார் ஷமி. இதனால் டெல்லி அணி தடுமாற்றத்தில் சிக்கியது.

வார்னர் விக்கெட்டும் கிடைத்திருந்தால் 3 விக்கெட்டுகள் பவர்பிளேவிலேயே ஷமிக்கு கிடைத்திருந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டம் வார்னர் பக்கம் அடித்ததால், அவர் தொடர்ந்து விளையாடினார். குஜராத் அணியை பொறுத்த வரைக்கும் வில்லியம்சனுக்கு பதிலாக மில்லரும், ரோமன் பவெல்லுக்கு பதிலாக நோர்க்கியாவும் அந்த அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடித்தனர்.

டெல்லி அணியில் அபிஷேக் போரல் அறிமுகமானார். டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரிஷப் பன்ட் காயமடைந்திருந்தபோதும், தன்னுடைய அணியை சப்போர்ட் செய்வதற்காக மைதானத்துக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அவரின் வருகை டெல்லி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.  

மேலும் படிக்க | IPL 2023: டெல்லி மற்றும் குஜராத் போட்டியை எப்போது, ​​எங்கே, எப்படி இலவசமாக பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News