CSK போட்டியை நிறுத்திய நாய்: துரத்த படாதுபாடுபட்ட ஊழியர்கள் - கவாஸ்கர் காட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 4, 2023, 02:49 PM IST
  • சேப்பாக்கத்தில் போட்டியை நிறுத்திய நாய்
  • மைதானத்திற்குள் புகுந்திய நாயை விரட்டிய ஊழியர்கள்
  • இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம்
CSK போட்டியை நிறுத்திய நாய்: துரத்த படாதுபாடுபட்ட ஊழியர்கள் - கவாஸ்கர் காட்டம் title=

ருதுராஜ் அரைசதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கத்தில் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் வெற்றிக் கணக்கை தொடங்கினர். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியிருந்த சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கத்தில் சிறப்பாக ஆடியது. குறிப்பாக, ருதுராஜ் கெய்க்வாட் முதல் போட்டியில் ஆடியது போலவே இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

லக்னோ அதிரடி

தொடர்ச்சியாக 2 அரைசதங்களை அடித்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் இந்த ஐபிஎல் தொடரின் அதிக ரன்கள் விளாசியிருப்பவர்கள் பட்டியிலில் முதல் இடம் பிடித்து ஆரஞ்சு நிற தொப்பியையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். இதேபோல் டெவோன் கான்வேவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 217 ரன்கள் குவித்தது. தோனி கடைசி ஓவரில் களமிறங்கி அடுத்தடுத்து 2 மெகா சிக்சர்களை விளாசி மைதானத்தில் இருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார். இறுதியில் அவர் அடித்த 12 ரன்கள் வித்தியாசத்தில் தான் சென்னை அணியும் வெற்றி பெற்றது. பவுலிங்கில் சிறப்பாக செயல்படாததால் லக்னோ அணியும் சேஸிங்கை சிறப்பாக நோக்கி முன்னேறினர். மேயர்ஸ் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை கலங்கடித்தார். 

மேலும் படிக்க | இதற்காக தான் தோனி அப்படி பேசினாரா? வெளியான உண்மை!

தோனி அறிவுறுத்தல்

அவர் அவுட்டான பிறகே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிம்மதி கிடைத்தது. வைடு, நோபால்களை சர்வ சாதாரணமாக வீசிய சிஎஸ்கே பந்துவீச்சாளர்களால் கேப்டன் தோனியும் பயங்கர அப்செட்டானார். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற விருது கொடுக்கும் நிகழ்வில்கூட சென்னை அணியின் பந்துவீச்சு திருப்தி இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். மேலும், அடுத்து வரும் போட்டிகளில் குறைவான வைடு மற்றும் ஒரு நோபால்கள் கூட வீசக் கூடாது என அறிவுறுத்திய அவர், இதனால் அபராதங்களையும், தனக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்படும் என்பதையும் மறைமுகமாக சிரித்துக் கொண்டே கூறினார். இப்படி பந்துவீசினால் வேறொரு கேப்டனுக்கு கீழ் சிஎஸ்கே வீரர்கள் விளையாட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மைதானத்திற்குள் நாய் 

இது இப்படி இருக்க போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நாய் ஒன்று சேப்பாக்கம் மைதானத்துக்குள் புகுந்தது. அதனை விரட்ட ஊழியர்கள் படாதபாடு பட்டனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி சுமார் 5 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் மைதான ஊழியர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போதும் நாய் இப்படி குறுக்கே வந்ததை நினைவுகூர்ந்த அவர், இதுபோன்று இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும படிக்க | ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ருத்ரதாண்டவம்..! சிஎஸ்கேவுக்கு ரன்மழை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News