IPL Rule Recap: ஐ.பி.எல் போட்டியில் வருகிறது புதிய விதிகள்.. 'காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்'

Impact Player Rule In IPL: ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகமாகும் விதிகள். டாஸ் போட்ட பின் அணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஏற்படும் மாற்றம் என்ன?

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 23, 2023, 02:55 PM IST
  • ஐபிஎல் 2023 தொடரில் புதிய விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்தவுள்ளது.
  • இந்த சீசன் முதல் 'இம்பாக்ட் பிளேயரை' தேர்வு செய்யும் முறை.
  • ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்.
IPL Rule Recap: ஐ.பி.எல் போட்டியில் வருகிறது புதிய விதிகள்.. 'காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்' title=

IPL Rule Recap: ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டிகளை மேலும் சுவாரஸ்யமாக்க புதிய விதிகளை பிசிசிஐ அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது 'இம்பாக்ட் பிளேயரை' தேர்வு செய்யும் முறை இந்த சீசன் மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஆனால் இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியாகவில்லை. இந்த புதிய விதிகள் மூலம் போட்டியின் சூழ்நிலையைப் பொறுத்து ரசிகர்களுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கலாம். ஐ.பி.எல் போட்டியில் அறிமுகமாகும் புதிய விதிகள் குறித்து பார்போம்.

தற்போதைய விதி என்ன?
ஒரு போட்டியில் டாஸ் போடுவதற்கு முன் தங்கள் அணியில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது. ஒருமுறை பட்டியலைக் கொடுத்து விட்டால், மீண்டும் மாற்றம் செய்ய முடியாது. 

புதிய விதியில் என்ன மாற்றம் இருக்கும்?
டாஸ் போடுவதற்காக மைதானத்துக்கு அணியின் கேப்டன்கள் வரும்போது, இரண்டு விதமான பட்டியலைக் கொண்டு வரலாம். டாஸ்ஸின் வெற்றி, தோல்வியை பொறுத்து, தங்கள் அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியலை கொடுக்கலாம். அதாவது டாஸ் போட்ட பிறகும் தங்கள் அணி சார்பாக விளையாடும் வீரர்கள் பட்டியலை அறிவிக்கலாம். 

மேலும் படிக்க: IPL2023: ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விலக இது சரியான நேரம்..! ஏன்?

அணிகள் தங்கள் வீரரை எவ்வாறு தேர்வு செய்யும்?
போட்டியில் மோதும் அணிகள், தங்கள் அணியில் விளையாடும் 11 பேர் கொண்ட பட்டியலுடன், 4 மாற்று வீரர்களைக் குறிப்பிட வேண்டும். 'இம்பேக்ட் பிளேயர்' இந்தப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இம்பாக்ட் பிளேயர் இந்திய வீரராக மட்டும் இருக்க வேண்டுமா?
இல்லை. ஒரு அணியில் விளையாடும் 11 பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை பொறுத்தது. அதாவது களத்தில் விளையாடும் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தால், அத்தகைய சூழ்நிலையில், ஒரு இந்திய இம்பாக்ட் பிளேயரை மட்டுமே மாற்று வீரராக அணிக்குள் கொண்டு வர முடியும். அதேநேரத்தில் ஒரு போட்டியில் பங்கேற்கும் அணியின் 11 பேரில் 3 அல்லது அதற்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றிருந்தால், ஒரு வெளிநாட்டு இம்பாக்ட் பிளேயரைக் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள்.

இம்பாக்ட் பிளேயரை எப்போது களம் இறக்க முடியும்?
அணிகள் இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே தங்கள் இம்பாக்ட் பிளேயரை கொண்டு வரலாம். இம்பாக்ட் பிளேயரை ஒரு ஓவரின் முடிவில், ஒரு விக்கெட் வீழ்ச்சி அல்லது ஒரு வீரருக்கு ஓய்வு தேவை என்ற நிலையில் கொண்டு வரலாம். 

மேலும் படிக்க: IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து

வெளியேறிய வீரர் மீண்டும் ஆட முடியுமா?
ஒரு வீரர் வெளியேறிய பிறகு, அவருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயரைக் கொண்டுவந்தால், வெளியேறிய வீரர் மீண்டும் அன்றைய போட்டியில் பங்கேற்க முடியாது. 

பாதி ஓவர் வீச முடியுமா?
ஒரு ஓவரில் சில பந்துகளை வீசிய பிறகு, அவருக்கு பதிலாக இம்பாக்ட் பிளேயரை அணியில் சேர்த்தால், ஏற்கனவே வீசப்பட்டிருக்கும் ஓவரை வீச முடியாது, அடுத்த ஓவர் வரை பந்து வீச காத்திருக்க வேண்டும்.

இம்பாக்ட் பிளேயரும் 4 ஓவர்கள் வீச முடியுமா?
இம்பாக்ட் பிளேயரால் மாற்றப்பட்ட ஒரு வீரர் எத்தனை ஓவர்கள் வீசியிருந்தாலும், இம்பாக்ட் பிளேயர் தனது முழு ஒதுக்கீடான 4 ஓவர்களை வீச அனுமதிக்கப்படுவார். 

மேலும் படிக்க: IPL Ticket Booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News