டெல்லி கேப்டல்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா திரும்பிய காரணம் என்ன?

Delhi Capitals Mitchell Marsh: டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர நாயகன் மிட்செல் மார்ஷ் இன்னும் சில போட்டிகளில் கலந்துக் கொள்ள மாட்டார். திருமணம் செய்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளார் மார்ஷ்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2023, 05:40 PM IST
  • டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புது மாப்பிள்ளை மிட்செல் மார்ஷ்
  • காதலியை கரம் பற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்
  • ஒரு வாரத்தில் இந்தியாவுக்கு வந்துவிடுவார் மார்ஷ்
டெல்லி கேப்டல்ஸ் அணியின் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா திரும்பிய காரணம் என்ன?  title=

IPL Player Wedding: டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட்டர் மிட்செல் மார்ஷ் இன்னும் ஒரு சில போட்டிகளில் இடம் பெற மாட்டார். அவர் தனது காதலியை திருமணம் செய்துக் கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023இல் மிட்செல் மார்ஷ்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல் 2023 போட்டித்தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ், முதல் இரண்டு ஆட்டங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, ஆனால் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான மிட்செல் மார்ஷ், விரைவில் வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது.

கிரேட்டா மேக் 

ட்செல் மார்ஷின் காதலியாக இருந்து மனைவியாக மாறவிருக்கும் கிரேட்டா மேக் யார் தெரியுமா?
ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கிரெட்டாவுடன் டேட்டிங் செய்த பிறகு, மிட்செல் மார்ஷ் தனது காதலியை திருமணம் செய்துக் கொள்வதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2021 செப்டம்பர் 11ம் நாளன்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

மேலும் படிக்க | IPL: கேன் வில்லியம்சன் காயம் சிறியது! ஆனால் 2023இல் இந்தியாவில் விளையாட முடியாது

கிரேட்டாவின் கல்வித் தகுதி
கிரேட்டா மேக் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் மற்றும் மொன்டானா மாநில பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷின் காதலியாக இருந்தாலும், கிரேட்டா தனது சுயவிவரத்தை பகிரங்கமாக வெளியிட விரும்பவில்லை.

சமூக ஊடகங்களில் கிரேட்டா மேக்

கிரேட்டா மேக், கிரிக்கெட் வீரர்களின் மிகவும் பிரபலமான தோழிகள்/மனைவிகளைப் போல தினசரி அடிப்படையில் தனது சமூக ஊடகங்களைப் புதுப்பிக்க விரும்புபவர் அல்ல என்பதால் அவரைப் பற்றிய வேறு தகவல்கள் எதுவும் தெரியவில்லை. 
 
கிரேட்டா மேக்கின் தொழில்
கிரேட்டா மேக்கின் தொழில் இன்னும் அறியப்படவில்லை, ஏனெனில் அவர் தனது தொழில் அல்லது உறவு பற்றி அதிகம் பகிரங்கமாக இல்லை.  

மேலும் படிக்க | LSG vs SRH ஐபிஎல் போட்டியில் காவியா மாறனின் கொண்டாட்டம் வைரல்

ஆஸ்திரேலியாவுக்கு பறந்த மிட்செல் மார்ஷ் 
மிட்செல் மார்ஷிற்கு தற்போது 31 வயதாகிறது. இதுவரையில் விளையாடிய முதல் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்த ஐபிஎல் போட்டித் தொடரில் அவர் இதுவரை பந்து வீசவில்லை. 2ஆவது போட்டியில் 4 பந்துகளில் 4 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், மிட்செல் மார்ஷ் தனது நீண்ட நாள் காதலியான கிரேட்டா மேக்கை திருமணம் செய்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் ஓரிரு ஆட்டங்களில் விளையாடமாட்டார். புது மாப்பிள்ளையாக வந்து அதிரடியாக களம் இறங்குவார் மிட்செல் மார்ஷ்.

மேலும் படிக்க | HBD STR: பிறந்தநாள் பரிசாக வந்த சிம்புவின் ‘பத்து தல’ பாடல், தெறிக்கும் இசை, ஜொலிக்கும் சிம்பு !!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News