சாதனையுடன் ஐபிஎல் போட்டியை தொடங்கும் ரவீந்திர ஜடேஜா

கேப்டனாக பொறுப்பு வகிக்காமல் அதிக போட்டிகள் ஐபிஎல் விளையாடிய வீரர் என்ற சாதனையை இன்றைய போட்டி தொடங்கியவுடன் படைக்க உள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2022, 01:34 PM IST
  • ஐபிஎல் முதல் நாளில் சாதனை படைக்க காத்திருக்கும் ஜடேஜா
  • கேப்டனாக இல்லாமல் அதிக போட்டிகள் விளையாடியவர்
  • 200 போட்டிகள் ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார்
சாதனையுடன் ஐபிஎல் போட்டியை தொடங்கும் ரவீந்திர ஜடேஜா title=

சாதனை என்ன? 

ஐபிஎல் 2022 பிரம்மாண்டமாக மும்பை வான்கடே மைதானத்தில் தொங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி முதன்முறையாக இன்றைய போட்டியில் வீரராக களமிறங்க உள்ளார். இதேபோல் ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகள் வீரராக விளையாடிய ஜடேஜா இன்று முதல் கேப்டன் என்ற பொறுப்பை ஏற்க உள்ளார். 

மேலும் படிக்க | தோனியின் இந்த செயலால் வருத்தமான ரசிகர்கள்!

முதல் வீரர்

இதன்மூலம் இன்றைய போட்டி தொடங்கியவுடன் அதிக போட்டிகள் வீரராக விளையாடிய வீரர் என்ற சாதனை ஜடேஜா வசம் வர உள்ளது. ரவீந்திர ஜடேஜா இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் லயன்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  ஒரு வீரராக மொத்தம் 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையும் அவர் வசம் உள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் ராபின் உத்தப்பா 193 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 184 போட்டிகளுடன் ஏபி டி வில்லியர்ஸ் மூன்றாவது இடத்திலும், 175 போட்டிகளுடன் அம்பதி ராயுடு நான்காவது இடத்திலும் உள்ளனர். சென்னை அணியின் 3வது கேப்டன் என்ற பெருமையும் ரவீந்திர ஜடேஜாவுக்கு கிடைக்க உள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸின் சாதனை

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. மறுபுறம், கொல்கத்தா இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்தமுறையும் கோப்பையை வென்று தோனியை வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்ற முனைப்புடன் சென்னை அணி களம் காண உள்ளது.  கொல்கத்தா அணியும் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் களமிறங்க இருப்பதால் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. சென்னை அணி 18 போட்டிகளிலும், கொல்கத்தா 8 போட்டிகளும் இதுவரை மோதியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 

மேலும் படிக்க | CSK vs KKR: ஐபில் 2022 முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா! நேரலை விவரங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News