IPL 2019: டெல்லி அணியிலிருந்து மும்பை அணிக்கு தாவிய பிரபல வீரர்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த்த யாதவ் வரும் IPL 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என BCCI தெரிவித்துள்ளது!

Last Updated : Dec 21, 2018, 12:00 PM IST
IPL 2019: டெல்லி அணியிலிருந்து மும்பை அணிக்கு தாவிய பிரபல வீரர்! title=

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஜெயந்த்த யாதவ் வரும் IPL 2019 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என BCCI தெரிவித்துள்ளது!

கடந்த 2015-ஆம் ஆண்டு IPL தொடரில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்தவர் ஜெயந்த் யாதவ். இந்நிலையில் வரும் IPL 2019-ல் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என தகவல்கள் கசிந்துள்ளது.

முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செயப்பட்ட டெல்லி ட்ரேடெவில்ஸ் அணியில் [பிரசாத் ஷா, அமித் மிஸ்ரா, பிரஷாஷ் கான், ஹர்ஷல் படேல், ராகுல் டஹிடியா, ஜெயந்த் யாதவ், மஞ்சுதா கல்ரா, கொலின் முர்ரோ, கிறிஸ் மோரிஸ், கிகிஸோ ரபாடா, சந்தீப் லெமிச்சேன், ட்ரெண்ட் போல்ட்] ஆகிய வீரர்கள் கடந்த IPL தொடரில் இருந்து தக்கவைக்கப் படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தக்க வைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான ஜெயந்த் யாதவ் மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

BCCI-ன் அறிவிப்பின் படி வரும் IPL 2019 தொடர் தொடங்குவதற்கு 30 நாட்கள் முன்னதாக IPL அணிகள் தங்களது வீரர்களை மாற்றிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

வலதுகை சுழற்பந்து வீச்சாளரான ஜெயந்த் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் நடைப்பெற்ற ஆசிய கோப்பை போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக 10 IPL போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜெயந்த் யாதவின் இடமாற்றத்திற்கு பின்னர் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உள்ள வீரர்களின் விவரம்.

  1. அக்ஷர் படேல் 
  2. ஹனுமா விஹாரி 
  3. இஷாந்த் சர்மா 
  4. அன்கூஸ் பைன்ஸ் 
  5. கொலின் டி இங்கிராம்
  6. ஷெர்பேன் ரூதர்போர்ட்
  7. கெமோ பால் 
  8. ஜலஜ் சக்ஸேனா 
  9. பந்தரு அய்யப்பா 
  10. நாது சிங்
  11. பிரசாத் ஷா
  12. அமித் மிஸ்ரா
  13. பிரஷாஷ் கான்
  14. ஹர்ஷல் படேல்
  15. ராகுல் டஹிடியா
  16. மஞ்சுதா கல்ரா
  17. கொலின் முர்ரோ
  18. கிறிஸ் மோரிஸ்
  19. கிகிஸோ ரபாடா
  20. சந்தீப் லெமிச்சேன்
  21. ட்ரெண்ட் போல்ட்

IPL 2019 தொடர் ஆனது வரும் மார்ச் 29, 2019 முதல் மே 29, 2019 வரை திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Trending News