மேகதாது விவகாரம்; சமரசம் கோரி கர்நாடக அமைச்சர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தகோரி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்!

Updated: Dec 6, 2018, 01:57 PM IST
மேகதாது விவகாரம்; சமரசம் கோரி கர்நாடக அமைச்சர் கடிதம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தகோரி தமிழக முதல்வருக்கு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கடிதம் எழுதியுள்ளார்!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் டெல்லியில் நடைப்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் இரண்டாவது கூட்டத்தில் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. 

இந்த சூழ்நிலையில், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.