IPL 2022 Mega Auction: முதல் நாள் "மெகா ஐபிஎல் ஏலம் 2022" முடிந்தது

IPL Mega Auction 2022: மெகா T20 ஏலம் 2022-ல் எந்த வீரர் எந்த அணியில் ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். அனைத்து விவரங்களும் கீழே இங்கே உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 12, 2022, 09:49 PM IST
    ஐபிஎல் மெகா ஏலம் இன்று
Live Blog

இந்த வருடம் ஐபிஎல்-ல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. மேலும், 2 புதிய அணிகள் ஐபிஎல்-ல் இணைந்துள்ளது. மொத்தமாக 10 அணிகள் இனி வரும் ஆண்டுகளில் விளையாட உள்ளன.

12 February, 2022

  • 21:30 PM

    இன்றைய ஏலம் முடிந்தது: 
    இன்று கடைசியாக ஏலம் கூறப்பட்ட சந்தீப் லாமிச்சானே எந்த அணியும் வாங்கவில்லை. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக இருந்தது.

     

  • 21:30 PM

    ஆர். சாய் கிஷோர்: 
    இந்திய பவுலரான ஆர். சாய் கிஷோரை அகமதாபாத் ரூ. 3 கோடிக்கு  ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக இருந்தது.

     

  • 21:30 PM

    ஜெகதீஷா சுஜித்:
    ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஜெகதீஷா சுஜித்தை ஹைதராபாத் ஏலம் எடுத்தது.

     

  • 21:30 PM

    ஷ்ரேயஸ் கோபால் :
    ரூ. 75 லட்சத்துக்கு ஷ்ரேயஸ் கோபால்-ஐ ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. 

  • 21:30 PM

    கே சி கரியப்பா: 
    ராஜஸ்தான் அணி ரூ. 30 லட்சத்துக்கு கே சி கரியப்பாவை ஏலம் எடுத்தது.

  • 21:15 PM

    முருகன் அஸ்வின்: 
    இந்திய வீரர் முருகன் அஸ்வின்-னை ரூ. 1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.

     

  • 21:15 PM

    நூர் அஹ்மது: 
    ஆப்கானிஸ்தான் நாட்டை செந்தா நூர் அஹ்மது-வை அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

  • 21:15 PM

    அன்கிட் சிங் ராஜ்புத்:
    லக்னோ அணி ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

  • 21:15 PM

    துஷார் டேஷ்பாண்டே:
    இந்திய வீரர் துஷார் டேஷ்பாண்டேவை அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது.

  • 21:15 PM

    இஷான் போரேல்:
    இந்திய வீரர் இஷான் போரேல்-ஐ  25 லட்சத்துக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.

  • 21:15 PM

    அவேஷ் கான்
    இந்திய வீரர் அவேஷ் கானை ரூ. 10 கோடிக்கு லக்னோ அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

     

  • 21:00 PM

    கே.எம்: ஆசிஃப்:
    இந்திய பந்து வீச்சாளரான கே.எம்: ஆசிஃப் -ஐ சென்னை அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

     

  • 21:00 PM

    ஆகாஷ் தீப்: 
    இந்திய பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்யை பெங்களூர் அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

     

  • 21:00 PM

    கார்த்திக் தியாகி:
    இந்திய வேக பந்து வீச்சாளரான கார்த்திக் தியாகி-ஐ ஹைதராபாத் அணி ரூ. 4 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

     

     

  • 21:00 PM

    பேசில் தம்பி
    இந்திய வீரர் பேசில் தம்பியை மும்பை அணி ரூ. 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கக்து.

     

  • 21:00 PM

    ஜிதேஷ் சர்மா: 
    இந்திய வீரர் ஜிதேஷ் சர்மாவை பஞ்சாப் அணியை அவரின் ஆரம்ப விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

     

  • 20:45 PM

    ஷெல்டன் ஜாக்சன்: 
    இந்திய வீரர் ஷெல்டன் ஜாக்சனை கொல்கத்தா அணி ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம்.

     

  • 20:45 PM

    பிரப்சிம்ரன் சிங்
    விக்கெட் கீப்பரான இந்திய வீரர் பிரப்சிம்ரன் சிங் -ஐ பஞ்சாப் அணி ரூ. 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.
     

     

  • 20:45 PM

    அனுஜ் ராவத்:
    டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பரான இந்திய வீரர் அனுஜ் ராவத் -ஐ பெங்களூர் அணி ரூ. 3.40 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

     

  • 20:30 PM

    கே.எஸ்.பாரத்:
    விக்கெட் கீப்பrரான இந்திய வீரர் கே.எஸ்.பாரத் -ஐ டெல்லி அணி ரூ. 2 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

  • 20:15 PM

    ஷபாஸ் அஹ்மது: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷபாஸ் அஹ்மதுவை பெங்களூர் அணி ரூ. 2.40  கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சம்.

     

  • 20:15 PM

    ஹர்ப்ரீத் பிரார்: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஹர்ப்ரீத் பிரார்-ஐ பஞ்சாப்  அணி ரூ. 3.80  கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சம்.

     

  • 20:15 PM

    கம்லேஷ் நாகர்கோட்டி:
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் கம்லேஷ் நாகர்கோட்டியை டெல்லி அணி ரூ. 1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.

     

  • 20:00 PM

    ராகுல் டெவாடியா:
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ராகுல் டெவாடியாவை குஜராத் அணி ரூ. 9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.

     

  • 20:00 PM

    சிவம் மாவி: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் சிவம் மாவியை கொல்கத்தா அணி ரூ. 7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.

     

  • 19:45 PM

    ஷாருக் கான்: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷாருக் கானை பஞ்சாப் அணி ரூ. 9 கோடிக்கு  ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாகும்.

     

  • 19:45 PM

    ஷரஃராஸ் கான்: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ஷரஃராஸ் கானை டெல்லி அணி அவரின் ஆரம்ப அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

     

     

  • 19:45 PM

    அபிஷேக் ஷர்மா: 
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் அபிஷேக் ஷர்மாவை ஹைதராபாத் அணி ரூ. 6.50 கோடிக்கு  ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.

     

     

  • 19:30 PM

    ரியான் பராக்
    ஆல் ரவுண்டரான இந்திய வீரர் ரியான் பராக்-ஐ ரூ. 3.80 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 30 லட்சமாக இருந்தது.

     

     

  • 19:30 PM

    ராகுல் திரிபாதி:
    இந்திய வீரர் ராகுல் திரிபாதியை ரூ. 8.50 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 40 லட்சமாக இருந்தது.

     

     

  • 19:30 PM

    அஸ்வின் ஹெப்பார்: 
    இந்திய வீரர் அஸ்வின் ஹெப்பாரை ரூ. 2.60 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலையும் ரூ. 20 லட்சமாகும்.

     

     

  • 19:15 PM

    டேவால்ட் ப்ரேவிஸ் 
    தென்னாப்பிரிக்கா வீரர் டேவால்ட் ப்ரேவிஸ்-ஐ ரூ. 3 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்.

     

     

  • 19:15 PM

    அபினவ் சடரங்கனி
    இந்திய வீரர் அபினவ் சடரங்கனியை ரூ. 2.60 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப அடிப்படை விலை ரூ. 20 லட்சமாகும்

     

     

  • 19:00 PM

    ப்ரியம் கார்க்:
    இந்திய வீரர் ப்ரியம் கார்க்கை ரூ. 20 லட்சத்துக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலையும்  ரூ. 20 லட்சமாகும்.

     

     

  • 18:45 PM

    ஐபிஎல் மெகா ஏலம் 2022: ஒவ்வொரு அணிக்கும் மீதமுள்ள ரூபாய்!

    - பஞ்சாப் கிங்ஸ் - 42.50 கோடி
    - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 40.30 கோடி
    - குஜராத் டைட்டன்ஸ் - 33.75 கோடி
    - மும்பை இந்தியன்ஸ் - 32.75 கோடி
    - சென்னை சூப்பர் கிங்ஸ் - 20.85 கோடி
    - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 20.50 கோடி
    - டெல்லி கேப்பிடல்ஸ் - 20 கோடி
    - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 17.40 கோடி
    - ராஜஸ்தான் ராயல்ஸ் - 16.25 கோடி
    - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 15.25 கோடி

  • 18:45 PM

    யுவேந்திர சாஹல்
    இந்திய வீரர் யுவேந்திர சாஹலை ரூ. 6.50 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலை ரூ. 2 கோடி ஆக இருந்தது.

     

     

  • 18:30 PM

    ராகுல் சாகர்: 
    இந்திய அணியின் பவுளர் ராகுல் சாகரை ரூ. 5.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது. அவரின் ஆரம்ப விலை ரூ. 75 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

     

     

  • 18:30 PM

    குல்தீப் யாதவ்:
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  ரூ. 2. கோடிக்கு பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை ஏலம் எடுத்தது.

     

     

  • 18:30 PM

    முஸ்தபிர் ரஹ்மான்: 
    வங்காள தேசம் பந்து வீச்சாளர் முஸ்தபிர் ரஹ்மானை ரூ. 2. கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது. அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

  • 18:15 PM

    இம்ரான் தாஹீர், அடில் ரஷித், ஆடம் ஜாம்பா ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை

  • 18:00 PM

    ஷர்துல் தாக்கூர்; 10.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். லக்னோ அணி 7.5 கோடி ரூபாய்க்கு மார்க்வுட்டை ஏலம் எடுத்தது. இந்திய வேகபந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 4.2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் அணிக்கு சென்றுள்ளார். முஸ்தாஃபிசூர் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்

  • 17:45 PM

    ஜோஸ் ஹேசில்வுட்; 7.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூரு

  • 17:45 PM

    லாக்கி பெர்குசன்; 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்

  • 17:30 PM

    பிரசித் கிருஷ்ணா; ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி

  • 17:30 PM

    தீபக் சாஹர் - 14 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராஜஸ்தான் அணி கடைசிவரை அவரை ஏலம் எடுக்க முயன்றது

  • 17:15 PM

    தமிழக வீரர் நடராஜனை ஏலம் எடுக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது

  • 17:00 PM

    4 கோடி ரூபாய்க்கு நடராஜனை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • 17:00 PM

    பேர்ஸ்டோவ் பஞ்சாப் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் RCB அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்
    இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவை ரூ.6.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணியின் மூத்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை 5.5 கோடிக்கு ஆர்சிபி வாங்கியது.

     

     

     

  • 16:30 PM

    ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷன், ₹15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி

     

     

Trending News