LSG vs CSK, Head-to-Head Record: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று, பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியடைந்தாலும் லக்னோ அணி சவாலான எதிரியான சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றது மற்றும் புள்ளி அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ளது. போட்டிக்கு முன்னதாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து புள்ளிவிவரங்கள் இங்கே.
சென்னை மற்றும் லக்னோ நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளனர். ஒரு போட்டியில் முடிவு எட்டபப்டவில்லை. கடந்த சீசனில் (ஐபிஎல் 2023) சென்னை மற்றும் லக்னோ மோதிய ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. அந்த போட்டியும் ஏகானா ஸ்டேடியத்தில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாடிய போட்டிகள்: 3
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வென்றது: 1
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது: 1
முடிவு இல்லை: 1
ஐபிஎல்: ஏகானா ஸ்டேடியத்தில் எல்எஸ்ஜி அணியின் வெற்றி, தோல்வி விவரம்
விளையாடிய போட்டிகள்: 10
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வென்றது: 5
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தோற்றது: 4
முடிவு இல்லை: 1
இந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அடித்தட அதிகபட்ச ஸ்கோர் 199 ஆகும். இது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது. மறுபுறம் இதே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் எடுத்தட குறைந்தபட்ச ஸ்கோர் 108 ஆகும். இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இருந்தது.
ஏகானா மைதானத்தின் தன்மை
ஏகானா ஸ்டேடியத்தில் ஆடுகளம் மெதுவாகவே இருக்கும். பெரிய ஸ்கோர் அடிப்பது கொஞ்சம் கஷ்டம். மைதானத்தின் எல்லைகள் நீளமாக இருப்பதால் சிச்சர் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். இந்த மைதானத்தில் முந்தைய இரண்டு ஆட்டங்களில் 160 ரன்களை எட்டியது.
லக்னோ வானிலை நிலவரம்
மாலையில் 25 டிகிரிக்கு மேல் வெப்பநிலை இருக்கும். காற்றின் வேகம் மணிக்கு 18 கிமீ வேகத்தில் வீசும். அதேவேளை ஈரப்பதம் 31 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. லக்னோவில் இன்று மழை பெய்ய வாய்ப்பில்லை.
லக்னோ vs சென்னை: இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது யார்?
சென்னை அணியின் வீரர்கள் வேகம் மற்றும் அவர்களிடம் அதிகமாகவே இருக்கிறது. சொந்த மைதானத்தில் விளையாடுவதை போலவே, இந்த மைதானத்தில் விளையாடக்கூடும். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க - சென்னை அணிக்கு குட் நியூஸ்! அந்த பிளேயர் போகலையாம் - பிசிசிஐ கோரிக்கை ஏற்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ