அடேங்கப்பா... ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு இத்தனை கோடி இருக்கா? தரமான வீரர்களை தூக்க மெகா திட்டம்!

IPL Auction 2024: அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் எவ்வளவு செலவு செய்ய இயலும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 24, 2023, 03:34 PM IST
  • பென் ஸ்டோக்ஸ் அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என அறிவிப்பு.
  • பென் ஸ்டோக்ஸ் கடந்தாண்டு ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.
  • பல வீரர்களை விடுவிக்க சிஎஸ்கே திட்டம்.
அடேங்கப்பா... ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கேவுக்கு இத்தனை கோடி இருக்கா? தரமான வீரர்களை தூக்க மெகா திட்டம்! title=

IPL Auction 2024, Chennai Super Kings: ஐபிஎல் தொடரில் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படும் நிலையில், இடைப்பட்ட ஆண்டுகளில் மினி ஏலம் நடைபெறும். அந்த வகையில், இந்த வருடத்திற்கான மினி ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் (IPL Mini Auction) வரும் டிச. 19ஆம் தேதி நடைபெறுகிறது. குறிப்பாக, ஐபிஎல் ஏலம் முதல் முறையாக துபாயில் நடைபெற உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள கோக்கோ கோலா ஏரினாவில் இந்த ஏலம் நடைபெற உள்ளது. 

மேலும், ஒரு அணி மொத்தமாக தனது அணியை கட்டமைக்க அதிகபட்சம் 25 வீர்ரகளை உள்ளடக்க வேண்டும். குறைந்தபட்சம் 18 வீரர்களையாவது வைத்திருக்க வேண்டும். மேலும், இந்த வீரர்களை வாங்குவதற்கு அந்த அணி மொத்தமாக இதுவரை ரூ.95 கோடிதான் செலவிட இயலும். அந்த வகையில், தற்போது ரூ.5 கோடி அதிகரித்துள்ள நிலையில், ரூ.100 கோடிவரை அணி வீரர்களுக்கு செலவிடலாம்.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே வாங்க நினைக்கும் வீரர்கள்... யாருக்கு யார் மாற்று?

அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி கடந்த மெகா ஏலத்திலும், மினி ஏலத்திலும் செலவிட்டது போக மொத்தம் ரூ.1.5 கோடி மீதம் (CSK Purse Amount) உள்ளது. இந்த நிலையில் வரும் சீசனில் சில வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் விடுவிக்க வாய்ப்புள்ளது, அதுமட்டுமின்றி பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்பதால் அவருக்கு செலவிட்ட ரூ.16.25 கோடியும் ஏலத்தில் சேர்ந்துவிடும் என்பதால், சுமார் ரூ.30 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும் எனலாம். 

நவ.26ஆம் தேதிக்குள் 10 அணிகளும் தாங்கள் விடுவிக்க உள்ள வீரர்கள், தக்கவைக்க உள்ள வீர்ரகள் என Retention பட்டியலை இறுதிசெய்ய வேண்டும். அதன்படி, உள்பட மொயின் அலி, சிசாண்டா மகாலா, கைல் ஜேமீசன், ராயுடு, சிம்ரன்ஜித் சிங், ஷேக் ரஷீத் உள்ளிட்ட வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. எனவே, நிச்சயம் ரூ.30 கோடிவரை சென்னைக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. எனவே, சென்னை இரண்டு பெரிய வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்களை வாங்க திட்டமிடலாம். குறிப்பாக, பாட் கம்மின்ஸ், ரஸ்ஸல், டேரில் மிட்செல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் போன்றவர்களை தூக்க திட்டமிடலாம். 

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மொத்தம் 5 கோப்பைகளை வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த தொடர்தான் இறுதி தொடராக அமைய வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் கடைசி முறை கோப்பையை வெல்ல தோனி அதிக முன்னெடுப்புகளை எடுப்பார் என கூறப்படுகிறது. அந்த வகையில், வரும் ஏலத்தில் இரண்டு தரமான வெளிநாட்டு ஆல்-ரவுண்டர்கள் சிஎஸ்கேவுக்கு பெரிய ஊக்கத்தை அளிக்க வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | கேப்டன் ரோஹித்தை கழட்டிவிடும் மும்பை...? தலைமை ஏற்க தாய் அணி திரும்பும் ஹர்திக்?!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News