வெட்கப்படும் எனது கணவர் எம்.எஸ். தோனி - வீடியோவை ஷேர் செய்த மனைவி

டெல்லி ஹோட்டலில் தோனியை பார்த்து இனியவனே - அழகானவனே என அழைத்த அவரது மனைவி சாக்ஷி. வீடியோ ஆனது வைரல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 29, 2020, 11:49 AM IST
வெட்கப்படும் எனது கணவர் எம்.எஸ். தோனி - வீடியோவை ஷேர் செய்த மனைவி title=

புது டெல்லி: முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி களத்தில் மிகவும் "கூல்" என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் காதல் விஷயத்தில் சற்று வெட்கப்படுகிறார். அதாவது அவரை குறித்து ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் அவரது மனைவி சாக்ஷியுடன் காணப்படுகிறார்.

இந்த வீடியோவில், சாக்ஷி தனது கணவர் கிரிக்கெட் வீரர் தோனியை "ஸ்வீட்டி, ஸ்வீட்டி" (Sweety-Sweety) என்று அழைக்கிறார். ஆனால் அவர் அவர்களைப் பார்க்கவில்லை. நேராக செல்கிறார். ஆனால் சாக்ஷியே அவரிடம் செல்கிறார். அதைப்பார்த்த தோனியை கொஞ்சம் வெட்கப்படுகிறார்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

#sweetieoftheday

A post shared by Sakshi Singh Dhoni (@sakshisingh_r) on

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தோனி தனது உடமைகளை கொண்டு வருவது வீடியோவில் காணப்படுகிறது. அவரது மனைவி சாக்ஷி தொடர்ந்து அவரை "ஸ்வீட்டி-ஸ்வீட்டி" என்று அழைக்கிறார். தோனி அவரை புறக்கணித்தாலும். இரண்டாவது வீடியோவில், தோனி தனது மனைவியிடம் வருகிறார். பின்னர் சாக்ஷி அவரை ஸ்வீட்டி மற்றும் க்யூடி என்று அழைக்கிறார். அதில் தோனி சிரிக்கிறார். இந்த வீடியோவை சாக்ஷி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது மிகவும் விரும்பப்படுகிறது.

 

முன்னதாக, தோனியின் மற்றொரு வீடியோ வைரலாகியது. அதில் தோனியை நடனத்திற்காக மேடைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அவர் அங்கிருந்து ஓட முயற்ச்சி செய்கிறார். மேலும் தயவு செய்து வேண்டாம் என்று கையெடுத்து கும்புடுகிறார்.

எம்.எஸ். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான யூகங்கள் 2019 உலகக் கோப்பையில் இந்தியாவின் அரையிறுதி ஆட்டத்திலிருந்து தொடங்கி விட்டது.

2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்திய மண்ணில் விளையாடப்பட்ட தொடரில் தோனி பங்கேற்காத நிலையில், தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் அவர் இடம் பெறவில்லை. இருப்பினும், எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் இல்லை. தோனி 2019-20 ஆம் ஆண்டிற்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020 இல் தோனி மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணி நிர்வாகம் டி 20 லீக்கில் அவரது செயல்திறனைப் பார்க்க காத்திருக்கிறது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News