மும்பை இந்தியன்ஸ் வெற்றி மிஸ்ஸானது எப்படி? அஷிஸ் நெகரா போட்ட கச்சிதமான வியூகம்

 Gujarat Titans vs Mumbai Indians: குஜராத் டைட்டன்ஸ் எனக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.  கடைசி நேரத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் நெகரா போட்ட கச்சிதமான வியூகமே இதற்கு காரணம்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 25, 2024, 01:46 PM IST
  • ஐபிஎல் போட்டியில் மும்பை அதிர்ச்சி தோல்வி
  • 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி
  • வெற்றியின் விளிம்பில் இருந்து தோல்வியடைந்தது எம்ஐ
மும்பை இந்தியன்ஸ் வெற்றி மிஸ்ஸானது எப்படி? அஷிஸ் நெகரா போட்ட கச்சிதமான வியூகம் title=

மும்பை இந்தியன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் இளம் வீரர் சாய் சுதர்சன் 39 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார். பின் வரிசையில் இறங்கிய ராகுல் டிவாட்டியா 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார்.

மேலும் படிக்க | வெற்றியை நழுவ விட்ட லக்னோ... அஸ்வின் எடுத்த அந்த விக்கெட் - RR வெற்றிக்கு இதுதான் காரணம்!

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் அபாரமாக பந்து வீசிய ஜஸ்பிரீத் பும்ரா மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான் நான்கு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் என்ற முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடினார். அவருக்கு பக்கபலமாக நமந்திர் 20 ரன்கள் எடுத்த ஆட்டம் இழக்க, டேவால்ட் பிரெவிஸ் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இருந்தார். 

அதேபோல் ரோகித் சர்மாவும் 43 ரன்கள் எடுத்தபோது தமிழக வீரர் சாய் கிஷோர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர்கள் ஆட்டம் இழந்தபோதும், மும்பை அணிக்கு வெறும் 4 ஓவர்களில் 40 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. ஆனால் பின் வரிசையில் களம் இறங்கிய எந்த பிளேயரும் ஒழுங்காக விளையாடவில்லை. பாண்டியா 11 ரன்களுக்கும், டிம் டேவிட் 11 ரன்களுக்கும் ஆட்டமிழக்க மற்ற அனைவரும் மிக சொற்ப ரன்களுக்கு விக்கெட் பறிகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ நேரிட்டது. மற்றொருபுறம் மும்பையின் பேட்டிங்கை கச்சிதமான கணித்து வைத்திருந்த குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் ஆஷிஸ் நெக்ரா, கடைசி ஓவர் எப்படி வீச வேண்டும் என்று இரண்டு ஓவர்களுக்கு முன்பே ஸபென்சர் ஜான்சனிடம் தெரிவித்திருந்தார். அதன்படியே அவரும் துல்லியமாக பந்துவீச, குஜராத் அணியின் வெற்றி வசமானது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றியின் விளிம்பில் இருந்த மும்பை அணி தோல்வியை தழுவ நேரிட்டது. அத்துடன் அவருடைய தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வெற்றியை ஐபிஎல் 2024 தொடரில் பதிவு செய்திருக்கிறது.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் தவறவிட்ட தங்கம்... சிக்ஸர் மழையால் திணறிய மைதானம் - யார் இவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News