ஹர்திக் பாண்டியா இல்லை! 2024ல் இந்திய அணியின் கேப்டனாகும் 3 வீரர்கள்!

Team India Captain: 2024ல் இந்திய அணி பல தொடர்களில் விளையாட உள்ளது. மேலும் பல இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்க உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jan 2, 2024, 01:17 PM IST
  • டி20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெறுகிறது.
  • இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க உள்ளது.
  • ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளார்.

Trending Photos

ஹர்திக் பாண்டியா இல்லை! 2024ல் இந்திய அணியின் கேப்டனாகும் 3 வீரர்கள்!  title=

இந்திய அணி 2024ல் பல முக்கிய போட்டிகளில் விளையாட உள்ளது.  ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.  அதன் பிறகு இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.  அதன்பிறகு, இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  2024 டி20 உலக கோப்பைக்காக அணியை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.  ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு அதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை எடுக்க திட்டமிட்டுள்ளது.  ரோஹித் சர்மாவின் டி20 எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ள நிலையில், ஹர்திக் தற்போது கேப்டனாக உள்ளது.  ஹர்திக் தற்போது காயத்தில் இருப்பதால், 2024-ல் சில புதிய வீரர்கள் இந்திய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளது.  

மேலும் படிக்க | இந்திய அணி செய்ய வேண்டிய 3 முக்கிய விஷயம்... தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வழி இதுதான்!

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா 2024 ஆம் ஆண்டில் இந்திய அணியில் தனது கேப்டன் பதவியில் அறிமுகமாகும் வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில், இந்திய அணியை வழிநடத்தினார்.  ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் இருவரும் கணுக்கால் காயத்துடன் தற்போது ஓய்வில் உள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டாள் அவர் துணை கேப்டனாக நியமிக்கப்படலாம்.

ஷ்ரேயாஸ் ஐயர்

ஷ்ரேயாஸ் ஐயர் அவ்வப்போது தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.  மேலும் எதிர்காலத்தில் இந்திய அணியை வழிநடத்த அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது.  உலகக் கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 டி20 போட்டிகளில், கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதல் மூன்று ஆட்டங்களில் ஐயருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.  தேவை ஏற்பட்டால் பிசிசிஐ ஐயரை கேப்டனாக நியமிக்கலாம்.  ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு கேப்டன்சி அனுபவம் உள்ளது. ஐபிஎல்லில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். மேலும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இந்திய ஏ அணியின் முழுநேர கேப்டனாக ஐயர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுப்மன் கில்

இந்திய அணியின் எதிர்கால நம்பிக்கைக்குரிய வீரராக ஷுப்மான் கில் உள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக பல சாதனைகளை புரிந்துள்ளார்.  அடுத்த சில ஆண்டுகளில் அவர் முழுநேர கேப்டன் பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டு கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த அவர், ஐபிஎல் 2024ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்த உள்ளார்.  ஒருவேளை குஜராத் கேப்டனாக கில் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படலாம்.  தற்போது மூன்று வடிவங்களிலும் விளையாடும் ஒருசில வீரர்களில் கில் ஒருவர்.  மேலும் எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ஊசிப்போட்டு உலகக் கோப்பை தொடரில் விளையாடிய ஷமி... அதிரவைக்கும் தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News