புது டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளால் பங்கேற்க இருந்த வீரர்களுக்கு பல சிக்கல்களையும், நிறைய சிரமங்களையும் தரும். ஆனால் அதேநேரத்தில் இந்த ஆண்டுக்கான போட்டியில் காயம் காரணமாக விளையாட முடியுமா? என இருந்த வீரர்களுக்கு பதக்கம் வெல்ல சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
உலகெங்கிலும் ஆண்டி முர்ரே, டைகர் உட்ஸ் மற்றும் கெவின் டூரண்ட் போன்ற வீரர்கள் தங்கள் காயங்களிலிருந்து மீள கூடுதல் 12 மாதங்கள் கிடைத்துள்ளன. அதேபோல இந்திய வீராங்கனை ஜிம்னாஸ்ட் டிபா கர்மகருக்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது ஒலிம்பிக் தொடர்.
ரியோவில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் இந்திய பெண் ஜிம்னாஸ்டாக ஆன நட்சத்திரம், பின்னர் வால்ட் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்தார். 2017 ஆம் ஆண்டிலிருந்து போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதற்கு காரணம், அவருக்கு தசைநார் பகுதியில் ஏற்பட்ட காயம் (ஏ.சி.எல்) மற்றும் அதற்கு அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது அவர் ஓய்வில் உள்ளார்.
Years of practice & then this moment. Im thankful today for the wishes & hope they continue to be with me #Rio2016
Credits: @olympicchannel pic.twitter.com/CHVIItLEPZ— Dipa Karmakar (@DipaKarmakar) August 9, 2017
ஆனால் அவருக்கு தற்போது கூடுதல் 12 மாதங்கள் கிடைத்துள்ளது. இப்போது அவர் தகுதி பெறுவதற்கு தன்னை தயார் செய்யலாம். ஒருவேளை இந்த இந்திய வீராங்கனை ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றால், இந்தியாவுக்கு வெள்ளி அல்லது தங்க பதக்கத்தை வென்று தருவார் என ரசிகர்கள் உட்பட இந்திய ஒலிம்பிக் அமைப்பு அதிகாரிகளும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.