தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் டி20 மழையின் காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 மொஹாலியில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா.
இதனையடுத்து மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தது. அணியில் அதிகப்பட்சமாக ஷிகர் தவான் 36(25) ரன்கள் குவித்தார். ரிசாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா தலா 19 ரன்கள் குவித்தனர். கசிக்கோ ரபாடா 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடிது. துவக்க ஆட்டகாரார் குவிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 52 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக ஹெண்டிர்க்ஸ் 28(26) மற்றும் பவுமா 27(23) ரன்கள் குவித்தனர். இதன் மூலம் ஆட்டத்தின் 16.5-வது பந்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி இலக்கை எட்டினார்.
இதன் மூலம் இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்த தென்னாப்பிரிக்கா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் அக்டோபர் 2-ஆம் நாள் விசாகப்பட்டினத்தில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.